மேலும் செய்திகள்
வங்கதேச தூதருக்கு மத்திய அரசு மீண்டும் சம்மன்
1 hour(s) ago | 1
புதுடில்லி: '' பாஜ., வின் மிரட்டல் மற்றும் தாக்குதல்களுக்கு காங்கிரஸ் பயந்துவிடாது'' என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராகுல் யாத்திரையின் போது வாகனங்கள் தாக்கப்பட்டதற்கு அசாம் அரசே காரணம். பாஜ., வின் மிரட்டல் மற்றும் தாக்குதல்களுக்கு காங்கிரஸ் பயந்துவிடாது. பா.ஜ.,வினர் காங்கிரஸ் கட்சியின் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை கிழித்ததையும் வன்மையாக கண்டிக்கிறோம். தாக்குதலில் ஈடுபட்ட பா.ஜ.,வினர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் நீதிக்கான ராகுல் யாத்திரையை தடுக்க முடியாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கார்கே தெரிவித்துள்ளார்.
1 hour(s) ago | 1