உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தொகுதி பங்கீடு முடிவு: டில்லியில் ஆம்ஆத்மி 4, காங்., 3 தொகுதிகளிலும் போட்டி?

தொகுதி பங்கீடு முடிவு: டில்லியில் ஆம்ஆத்மி 4, காங்., 3 தொகுதிகளிலும் போட்டி?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வரும் லோக்சபா தேர்தலில் டில்லியில் ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளன என டில்லி அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. வரும் ஏப்.,மே மாதங்களில் லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. இதில், மத்தியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும், பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்த, காங்., - சமாஜ்வாதி - திரிணமுல் காங்., - தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் இணைந்து, இண்டியா என்ற கூட்டணியை அமைத்துள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w0q3yzri&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக, இக்கூட்டணி கட்சிகளிடையே அந்தந்த மாநிலங்களில் பேச்சு நடக்கிறது. எனினும், மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடுவதாக, திரிணமுல் காங்., தலைவரும், முதல்வருமான மம்தா அறிவித்தார். அவரை தொடர்ந்து, பஞ்சாபில் மட்டும் தனித்து போட்டியிடுவதாக, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி அறிவித்தது. உ.பி.,யில் மொத்தமுள்ள 80 லோக்சபா தொகுதிகளில், 17ல் காங்கிரசும், 63ல் சமாஜ்வாதியும் போட்டியிடுவது என முடிவு செய்து, தொகுதி பங்கீட்டை இறுதி செய்துள்ளன.

தொகுதி பங்கீடு முடிவு

இந்நிலையில், டில்லியில் 7 லோக்சபா தேர்தல் தொகுதிகள் உள்ளன. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. காங்கிரஸ் 3 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும் களமிறங்கும். அதேபோல், ஹரியானாவில் காங்கிரஸ் 9 தொகுதிகளிலும், ஆம்ஆத்மி 1 தொகுதியிலும் போட்டியிடும். குஜராத்தில் காங்கிரஸ் 24 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 2 தொகுதிகளிலும் போட்டியிடும் என அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பஞ்சாபில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிடப் பரஸ்பரம் முடிவெடுத்துக் கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

மணியன்
பிப் 23, 2024 12:44

கேஜ்ரிவால் காங்ரஸும் பாஜகவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்று சொல்லி டெல்லி மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்து விட்டு மதுபான லைசென்ஸ் வழங்கியதில் மிகப்பெரிய ஊழலை செய்து கொள்ளையடித்து விட்டு,ஈடியிடமிருந்து தப்பிக்க அதே காங்ரஸுடன் கூட்டணி வைப்பது மக்களுக்கு புரியாமலா போகும்.


மோகனசுந்தரம்
பிப் 23, 2024 11:24

எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்.


பேசும் தமிழன்
பிப் 23, 2024 08:01

யார்..... எத்தனை தொகுதியில் தோற்ப்பது என்பதில் உடன்பாடு.... விளங்கிடும்.


M Ramachandran
பிப் 22, 2024 21:18

மத்திய அரசு நிர்பந்தகளுக்கு பாடியகூடாது . இந்த கும்பல் பஞ்சாபில் இந்த தர்ணாவை செய்ய்யட்டும் தைரியம் இருக்கா? தூண்டி விடும் டில்லி வாலா அங்கு எலி வலையில் பதுஙகி பூமிக்கடியில் தோண்டி கொண்டிருக்கு. வெளியில் வந்தால் பூனை யோ அல்லது பருந்தோ கவ்வி சென்று விடும். ஆனால் பூணையிடம் அக்ரீமெண்ட் பருந்திடம் முடியாதெ.


Jay
பிப் 22, 2024 21:10

அந்த பஞ்சாப் விவசாயிகளை டில்லிக்குள் விட்டு போராட விடுங்க. டில்லி மக்கள் கடுப்பாகி இந்த இரண்டு கட்சிகளுக்கும் ஆப்பு அடிப்பார்கள். சென்ற முறை நடந்த பஞ்சாப் இடைத்தரகர்கள் போராட்டத்தில் ஆன டிராபிக் பிரச்சினையில் டில்லி மக்கள் கடுப்பாகி விட்டனர். இந்த போராட்டத்தை தூண்டி விடும் கட்சிகள் காங்கிரஸும் ஆப்பும்தான். முள்ளை முள்ளால் எடுக்க...


M Ramachandran
பிப் 22, 2024 21:08

ஆகா கூடி பஞ்சாபில் அரைகுறை ஆத்மீ பெரிய நாமம் போட்டுடிச்செய்ய மானமிழந்த ஒரு கட்சிக்கு


RAMAKRISHNAN NATESAN
பிப் 22, 2024 20:29

ஊழலை எதிர்க்க பிறந்த கட்சி (ஆம் ஆத்மி) ஊழலுடனேயே கூட்டணி ........


krishnamurthy
பிப் 22, 2024 20:27

எதிர் எதிர் அணியெல்லாம் சுயநலத்திற்காக கூட்டணி. மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.நாட்டுப்பற்று இல்லாதவர்களுக்கு ஆதரவு தரக்கூடாது


Kannan
பிப் 22, 2024 20:26

காங்கிரஸ் தனித்து நின்றாள் மூன்றாம் இடம் கிடைக்கும் .அதுவே ஆம் ஆத்மி கூட்டணியில் டெல்லி யில் 2 தொகுதியிலாவது வெற்றிபெற முடியும்.கார்கே அவர்களுக்கு முதல் வெற்றி .


தாமரை மலர்கிறது
பிப் 22, 2024 20:24

வடநாட்டு பிரேமலதா ராகுலுடன் யார் கூட்டணி வைத்தாலும், வைக்காவிட்டாலும், ஒரு பிரயோஜனமும் இல்லை.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை