உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே நாளில் இரு முறை பதவி ஏற்ற அமைச்சரால் சர்ச்சை

ஒரே நாளில் இரு முறை பதவி ஏற்ற அமைச்சரால் சர்ச்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: ம.பி., மாநிலத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்த ராம்நிவாஸ் ராவத் என்ற எம்.எல்.ஏ., ஒரே நாளில் இரு முறை அமைச்சர் பதவி ஏற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.ம.பி., மாநிலம் விஜய்பூர் தொகுதி எம்.எல்.ஏ., ராம்நிவாஸ் ராவத். காங்கிரசின் செயல் தலைவராக பதவி வகித்தார். சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார். அதேநேரத்தில் எம்.எல்.ஏ., பதவியை இன்னும் ராஜினாமா செய்யவில்லை.இந்நிலையில், இன்று காலை 9 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் இணை அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு கவர்னர் மங்குபாய் படேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆனால், அடுத்த 15 நிமிடங்களில் மீண்டும் அவர் கேபினட் அமைச்சராக பதவியேற்றார்.முதலில் பதவியேற்ற ராம் நிவாஸ் ராவத், தவறுதலாக பதவி ஏற்றதால் அவர் மீண்டும் பதவியேற்றார் என தெரியவந்துள்ளது. இது குறித்து அவர் கூறும் போது, முதலில் பதவியேற்ற போது ஒரு வார்த்தையை தவற விட்டு விட்டதால், மீண்டும் பதவியேற்று கொண்டதாக கூறினார். ஒரே நாளில் இரண்டு முறை அவர் பதவியேற்றது தான் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஆக இருந்து கொண்டு அவர் எப்படி பா.ஜ., அமைச்சரவையில் இடம்பெற முடியும் என கேள்வி எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Swaminathan L
ஜூலை 09, 2024 15:26

ஒரே நாளில் கூட்டணியை மாற்றிக் கொள்ளும் கட்சிகள், கட்சிகள் தாவும் அரசியல் பிரமுகர்கள், மாற்றி மாற்றிப் பேசும் அரசியல் தலைகள் இருக்கும்போது இப்படி நடந்தது ஆச்சரியமான விஷயமோ அல்லது குற்றச்சாட்டுக்கு உரிய விஷயமோ அல்ல. இந்திய கான்ஸ்டிடியூஷனை மதிப்பேன், காப்பேன் என்று பிரமாணம் செய்து விட்டு காலிஸ்தான் ஆதரவுக் குரல் கொடுப்பதை விடவா?


அரசு
ஜூலை 09, 2024 08:45

பாரதீய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும். எல்லாம் பதவியும், பணமும் படுத்தும் பாடு.


SRIRAMA ANU
ஜூலை 08, 2024 17:04

கடந்த 8 ஆண்டுகளில் மொத்தமாக 7 பேர் மட்டுமே முழு மதிப்பெண் பெற்ற நிலையில், இந்த ஆண்டு 67 மாணவர்கள் முழு மதிப்பெண்ணான 720 மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிலும், ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் 6 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதற்கெல்லாம் மேலாக 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் கூட, நீட் தேர்வில் 700-க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றிருப்பது நீட் தேர்வு என்பது குளறுபடிகளின் உச்சமாக இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது


ஆரூர் ரங்
ஜூலை 08, 2024 19:11

அதிக புத்திசாலிகள் உருவாவதில் உங்களுக்கு என்ன பொறாமையோ? பல பிரபல பள்ளிகளில் மிகவும் புத்திசாலி மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி கிடைக்கிறது .அவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. 30, 40 வருடங்களுக்கு முன்பு எண்பதுக்கு மேல் எடுத்தாலே மருத்துவ இடம் கிடைத்துக் கொண்டிருந்தது.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி