உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜபுத்திரர்கள் குறித்த சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கோரினார் மத்திய அமைச்சர்

ராஜபுத்திரர்கள் குறித்த சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கோரினார் மத்திய அமைச்சர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: ராஜபுத்திரர்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு மத்திய அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா மன்னிப்பு கோரினார்.லோக்சபா தேர்தலையொட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட் தொகுதி பா.ஜ., வேட்பாளரும், மத்திய அமைச்சருமான புருஷோத்தம் ரூபாலா, சமீபத்தில் பேசுகையில், ராஜபுத்திர சமூகத்தினர் , ஆங்கிலேயர்களுக்கு பெண் கொடுக்கும் அளவிற்கு அவர்களுடன் நெருக்கம் காட்டினர் என பேசினார். இவரது பேச்சுக்கு குஜராத்தில் வசிக்கும் ராஜபுத்திர சமூகத்தினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.இந்நிலையில் இவரது பேச்சுக்கு ராஜஸ்தான், உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வசிக்கும் ராஜபுத்திர சமூகத்தினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தாம் பேசிய கருத்தை திரும்ப பெறுவதாக அறிவித்து மன்னிப்பு கோரினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

MADHAVAN
மே 09, 2024 11:40

மன்னிப்புகேப்பது இவனுங்களுக்கு அல்வசாப்பிடுவதுமாதிரி,


Syed ghouse basha
மே 09, 2024 09:14

முடிந்தது பஜக சகாப்தம்


Velan Iyengaar
மே 09, 2024 08:22

மன்னிப்பு கேட்கும் ஆரம்பரை வழித்தோன்றல்கள்


R Kay
மே 09, 2024 00:35

மேடை கிடைத்ததும் சிலர் உளற ஆரம்பித்துவிடுகின்றனர்


naadodi
மே 09, 2024 00:24

சாம் பிட்ரோடா மட்டும் தர்மவான் உம்மை மாதிரி தமிழர்களை ஆப்ரிக்கர்கள் என்ற உத்தமர் எந்த கட்சியோ?


Narayanan Muthu
மே 08, 2024 20:39

தேர்தல்னு ஒன்னு இல்லாம போனா இவனுங்க எதையும் பேசுவானுங்க செய்வானுங்க பிஜேபியில் மட்டுமே மக்களை துச்சமாக மதிக்கும் இவர்கள் இருக்கமுடியும்


ديفيد رافائيل
மே 08, 2024 22:32

உண்மை தான், ஏதோ ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்குறதால தான் அடக்கி பேசுறானுங்க


Velan Iyengaar
மே 08, 2024 20:01

மன்னிப்பு கேட்டுட்டா அதுவும் இவ்ளோ தாமதமா மன்னிப்பு கேட்டா ராஜபுத்திரர்கள் விட்டுடுவார்களா ?? வெச்சு செய்ய காத்திருக்கிறார்கள்


Anantharaman Srinivasan
மே 08, 2024 19:40

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு இது தமிழ் வரிகள் இந்திகாரனுக்கு தெரிய வாய்ப்பில்லை எனவே பேசியது பேசியதுதான் மன்னிப்பு கேட்டாலும் கொட்டிய வார்த்தைகளை திரும்ப பெறமுடியாது


மேலும் செய்திகள்









புதிய வீடியோ