உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாநகராட்சி பட்ஜெட் - 10

மாநகராட்சி பட்ஜெட் - 10

ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை முறைl அனைத்து விதமான பணம் செலுத்துவதற்கும் வசதியாக 'ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை முறை'யை, மாநகராட்சியின் நிதி பிரிவு செயல்படுத்தியுள்ளது. நடப்பாண்டு முதல், இந்த முறை அனைத்து பிரிவுகளிலும் நடைமுறைப்படுத்தப்படும்l அன்றாட கணக்குகளை சரிபார்ப்பது, பட்ஜெட் தயாரிப்பது, வரி தொடர்பான அனைத்து விஷயங்களையும் நிர்வகிக்கவும், பொருளாதார மேம்பாடு குறித்து ஆலோசனை வழங்கவும், சிறந்த பட்டய கணக்காளர் தலைமையில், கணக்கு மற்றும் பட்ஜெட் பிரிவு அமைக்கப்படும்l வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து விதமான வளர்ச்சி பணிகளுக்கும், பட்ஜெட் அறிவிப்பின்படியே நிதி ஒதுக்கப்படும்திருநங்கையர் தங்கும் விடுதிl ஓய்வு பெறும் துப்புரவு தொழிலாளர்களுக்கு இந்தாண்டு முதல் ஓய்வூதியம் வழங்கப்படும். இதற்கு, 137.50 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்l பணிபுரியும் மகளிர், துப்புரவு தொழிலாளர்களுக்கு எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள்; மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் இலவசமாக வழங்க, 12 கோடி ரூபாய் ஒதுக்கீடுl திருநங்கையர், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கும், சுய தொழில் துவங்க அதிகபட்சமாக 1.50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். இத்திட்டத்துக்கு இந்தாண்டில் 10 கோடி ரூபாய் வழங்கப்படும்l வீடற்ற நகர பகுதி மக்கள் வீடு கட்டி கொள்ள 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதற்கு, 211 கோடி ரூபாய் ஒதுக்கீடுl எட்டு மண்டலங்களில், தலா ஒரு முதியோர் இல்லம் அமைப்பதற்கு, 4 கோடி ரூபாய் ஒதுக்கீடுl பணிபுரியும் பெண்களுக்கு, பாதுகாப்பாக தங்குவதற்கு, 'சாவித்ரி தங்கும் விடுதிகள்' அமைக்க, 4 கோடி ரூபாய் வழங்கப்படும்l திருநங்கையர் நலனுக்காக, இரவில் தங்க, ஒரு தங்கும் விடுதியும்; ஆதரவற்றோர் இரவில் தங்க 48 தங்கும் விடுதிகளும் 4 கோடி ரூபாயில் அமைக்கப்படும்l நகரின் 5,000 நடைபாதை வியாபாரிகளுக்கு ரிக் ஷா வழங்க, 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு. இதில், மகளிர், திருநங்கையருக்கு, தலா 1.50 லட்சம் ரூபாயும், மற்றவர்களுக்கு 1 லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ