அமைச்சர் பரத்வாஜுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
புதுடில்லி:பா.ஜ., உறுப்பினர் தொடர்ந்த அவதூறு வழக்கில், ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், அமைச்சருமான சவுரவ் பரத்வாஜ் பதில் அளிக்குமாறு, நீதிமன்றம் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.பா.ஜ., உறுப்பினர் சூரஜ்பான் சவுகான், டில்லி பெருநகர கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில், “கடந்த 2018ம் ஆண்டு என் மீது போலீஸ் வழக்கு தொடர்ந்துள்ளதாக அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் தவறான தகவலை பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார். அவதூறு பரப்பிய பரத்வாஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,”என, கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் நேஹா மிட்டல், மனுதாரதின் குற்றச்சாட்டு குறித்து ஜனவரி 9ம் தேதிக்குல் பதில் அளிக்குமாறு, சவரவ் பரத்வாஜுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.