உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபரிமலையில் பக்தர்களுக்கு குடிநீர் வழங்க கோர்ட் உத்தரவு

சபரிமலையில் பக்தர்களுக்கு குடிநீர் வழங்க கோர்ட் உத்தரவு

திருவனந்தபுரம், சபரிமலையில் கூட்டத்தில் சிக்கி தவிக்கும் பக்தர்களுக்கு குடிநீர், குளிர்பானங்களை வழங்க திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில், மண்டல பூஜைக்காக கடந்த நவம்பரில் திறக்கப்பட்டது. மண்டல பூஜை முடிந்து மூடப்பட்ட நடை, மகர விளக்கு கால பூஜைகளுக்காக கடந்த 30ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது.அன்று முதல் இன்று வரை கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சரங்குத்தியைக் கடந்து மரக்கூட்டம் வரை பக்தர் கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அய்யப்பனை தரிசித்து வருகின்றனர். நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதால், அதைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசாரும், திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகிகளும் திணறி வருகின்றனர்.கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாவதை அறிந்த கேரள உயர் நீதிமன்றம், அது குறித்து தாமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் அளித்த உத்தரவில் கூறப்படுவதாவது:மண்டல - மகரவிளக்கு திருவிழாக்களால் சபரிமலையில் கட்டுக்கடங்காமல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், பக்தர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். பல மணி நேர நெரிசலில் சிக்கி தவிக்கும் பக்தர்களுக்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு, குடிநீர் மற்றும் குளிர்பானங்களை வழங்க வேண்டும். அவர்களுக்கு உதவும் வகையில் சபரிமலை பாதையில் உள்ள முக்கிய வளைவுகளில் போதுமான தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும். போதுமான குடிநீர், சிற்றுண்டி ஆகியவற்றை அவர்களுக்கு வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள், நிலக்கல்லில் உள்ள தேவசம் போர்டுக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தப்படுவதை தேவசம் போர்டு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

vaiko
ஜன 05, 2024 02:01

வீட்டிலேயே இருந்து சாமி கும்பிட்டால் இந்த பிரச்சனைகள் எல்லாம் வராது. மேலும் கோவிலுக்கு செல்லும் போது காணிக்கையை உண்டியலில் போடுவதா இல்லை தட்டில் போடுவதா என்ற பிரச்சனையும் வராது.


Ganesh Kumar 007
ஜன 05, 2024 10:32

நீயும் வீட்டிலேயே இருந்திருக்கலாம்.இப்படி பெர்முடா சென்று கஷ்ட்டப்பட்டு சம்பாதிக்க வேண்டாம்


கணபதி
ஜன 05, 2024 01:38

இதை விட அதிக பக்தர்கள் வரும் திருமலையில் அனைத்து வசதிகளும் 24 மணிநேரம் கிடைக்கிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் வந்தாலும் சமாளிக்கிறார்கள். ஆனால் சபரிமலையில் வருமானம் ஒன்றே குறிக்கோள். அரசு தேவசம் போர்டு மனநிலை மாற வேண்டும்.


Ramesh Sargam
ஜன 05, 2024 09:08

திருப்பதி கோவிலை பற்றி நான் அடிக்கடி ஒப்பிட்டு கருத்து தெரிவித்து உள்ளான். கேரளா கம்யூனிஸ்ட் அரசு ஹிந்துக்களை மதிப்பதில்லை. அதுவே இந்த அவலத்துக்கு முக்கிய காரணம். முதலில் கேரளாவில் கம்யூனிஸ்ட் அரசு ஒழியவேண்டும்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி