| ADDED : மார் 21, 2024 03:23 AM
பெங்களூரு: பெங்களூரு அருகே ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. ஏரி தண்ணீரில் மர்மநபர்கள், விஷம் கலந்ததாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது.பெங்களூரு ரூரல் கிட்டப்பனஹள்ளி கிராமத்தில், பெட்டஹள்ளி ஏரி உள்ளது. அந்த ஏரியை சுரேஷ் என்பவர் குத்தகைக்கு எடுத்து, மீன்களை வளர்த்து வந்தார்.இந்நிலையில், ஏரியில் வளர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான, மீன்கள் நேற்று காலை செத்து மிதந்தன. இதுபற்றி அறிந்ததும் சுரேஷும், அவரது குடும்பத்தினரும் அங்கு சென்றனர்.தொழில் போட்டியால் ஏரி நீரில் விஷம் கலந்து, மீன்களை கொன்றதாக, மர்மநபர்கள் மீது சுலிபெலே போலீசில், சுரேஷ் புகார் அளித்தார்.ஏரிக்குச் செல்லும் வழியில் உள்ள, வீடுகளில் பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். 'மீன்களை கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கிராம மக்களும் கோரிக்கை வைத்து உள்ளனர்.