உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மகளிர் ஆணைய தலைவி குறித்து அவதூறு: மஹூவா மொய்த்ரா மீது வழக்கு

மகளிர் ஆணைய தலைவி குறித்து அவதூறு: மஹூவா மொய்த்ரா மீது வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா ஷர்மாவை அவதூறாக விமர்சித்து சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., மஹூவா மொய்த்ரா மீது, புதிய கிரிமினல் சட்டத்தின் கீழ் டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணா நகர் தொகுதி எம்.பி., மஹூவா மொய்த்ரா. திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், கடந்த ஆண்டு லோக்சபாவில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியதற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.இந்நிலையில், உ.பி., மாநிலம் ஹாத்ரசில் ஆன்மிக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த இடத்தில் தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா ஆய்வு செய்தார். அப்போது, அவருக்கு குடை பிடித்தபடி ஒருவர் நின்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகின. இது குறித்து, ரேகா சர்மாவை அவதூறாக விமர்சிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் மஹூவா மொய்த்ரா கருத்து தெரிவித்து இருந்தார்.இது குறித்து தகவல் அறிந்த மகளிர் ஆணைய தலைவி, விளக்கம் கேட்டு மஹூவா மொய்த்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு பதிலளிக்காத இவர், சமூக வலைதளத்தில் டில்லி போலீசை மேற்கோள் காட்டி தன் மீது நடவடிக்கை எடுக்கும்படி பதிவிட்டு இருந்தார்.இந்நிலையில், தேசிய மகளிர் ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில் மஹூவா மொய்த்ரா மீது டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

வாய்மையே வெல்லும்
ஜூலை 08, 2024 07:46

சபீனா தயாரிப்பு தரம் அவ்வளவு தான் இருக்கும் .


Shankar
ஜூலை 07, 2024 22:17

தான் தோன்றித்தனமாக பேசுபவர்கள் செய்பவர்கள் முன்பு அமைதியாக இருக்க வேண்டும் அவர்களை பாராளுமன்றத்தில் வளர்த்து விட வேண்டும் இறுதியில் அவர்களாகவே தங்களுக்கு தண்டனை ஐயகோ என கொடுத்துக் கொள்வார்கள்


sankaranarayanan
ஜூலை 07, 2024 20:10

மமதாவின் சீடர்தான் மஹூவா மொய்த்ரா ஆதலால் சென்றமுறை தண்டிக்கப்பட்டும் வெளிவந்த இருக்கு இன்னமுன்னம் சுய நிலை புரியவில்லை. சகட்டுமேனிக்கு அனைவரையும் பேசும் திறன் கொண்டவர் இனிமேலாவது இவருக்கு தகுந்த தண்டனை விதித்து மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக விளங்கவேண்டும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை