மேலும் செய்திகள்
உ.பி.,யில் 170 ஆடுகள் திடீர் உயிரிழப்பு
2 minutes ago
பயணியை தாக்கிய விமானி ஒரு வாரத்துக்கு பின் கைது
3 minutes ago
புதுடில்லி: பதவியில் இருந்து விலகி ஐந்து மாதங்களாகியும், முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கருக்கு இன்னும் மத்திய அரசு சார்பில் வீடு ஒதுக்கப்படவில்லை. நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக, 2022 ஆகஸ்டில் பதவியேற்ற ஜக்தீப் தன்கர், 74, உடல் நிலையை காரணம் காட்டி, கடந்த ஜூலையில் அப்பதவியை ராஜினாமா செய்தார். ஜூலை 21ல், பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் துவங்கிய முதல் நாளே, அவர் பதவி விலகியது சலசலப்பை ஏற்படுத்தியது. மத்திய அரசுடனான கருத்து வேறுபாடால் அவர் பதவி விலகியதாக கூறப்பட்டது. செப்டம்பரில், துணை ஜனாதிபதிக்கான அதிகாரப்பூர்வ அரசு பங்களாவை காலி செய்த ஜக்தீப் தன்கர், டில்லியின் சத்தர்பூர் பகுதியில் உள்ள தனியார் பண்ணை வீட்டில் குடிபெயர்ந்தார். முன்னாள் துணை ஜனாதிபதி என்ற முறையில் அரசு பங்களா வழங்கக் கோரி, ஆக., 22ல், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்துக்கு அவர் கடிதம் எழுதினார். எனினும் இதுவரை வீடு ஒதுக்கப்படவில்லை. முன்னாள் துணை ஜனாதிபதி என்ற முறையில், மாதம் 2 லட்சம் ரூபாய் ஓய்வூதியம், அரசு பங்களா, தனி செயலர் உள்ளிட்ட சலுகைகள் ஜக்தீப் தன்கருக்கு கிடைக்கும்.
2 minutes ago
3 minutes ago