உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "கருணை மனு மீது முடிவு கால வரையறை இல்லை

"கருணை மனு மீது முடிவு கால வரையறை இல்லை

புதுடில்லி : 'தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரின் கருணை மனு மீது, ஜனாதிபதி முடிவு எடுப்பதற்கு கால வரையறை எதுவும் கிடையாது' என, மத்திய அரசு, சென்னை ஐகோர்ட்டில் பதில் அளிக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜிவ் கொலை வழக்கில், கருணை மனு நிராகரிக்கப்பட்ட குற்றவாளிகளான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரும், சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். அதில், தங்கள் கருணை மனு மீது முடிவு எடுக்க ஜனாதிபதிக்கு 11 ஆண்டுக்காலம் எடுத்துக் கொண்டதை குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி சென்னை ஐகோர்ட், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து மத்திய அதிகாரிகள் சிலர் கூறுகையில், 'இதுபோன்று தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரின் கருணை மனு மீது ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பதற்கான கால வரையறை எதுவும் இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை. அதனால் மனு தாரர்களின் வாதம் செல்லுபடியாகாது. இதை, மத்திய அரசு, சென்னை ஐகோர்ட்டில் குறிப்பிட வாய்ப்பிருக்கிறது' என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி