உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் விரைவில் பெங்களூரில் இயக்கம்

ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் விரைவில் பெங்களூரில் இயக்கம்

பெங்களூரு: ஆர்.வி.சாலை - பொம்மசந்திரா இடையிலான மெட்ரோ ரயில் பாதைக்கு, ஓட்டுனர் இல்லாத ரயில் பிப்ரவரி நடுவிலோ அல்லது இறுதியிலோ வரும் வாய்ப்புள்ளது.பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:பெங்களூரின், எலக்ட்ரானிக் சிட்டிக்கு இணைப்பு ஏற்படுத்தும், ஆர்.வி.சாலை - பொம்மசந்திரா இடையே, 18 கி.மீ., தொலைவிலான மெட்ரோ பாதையில், ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் இயக்கப்படும். இந்த ரயிலை சீனா நிறுவனம் சப்ளை செய்கிறது. எங்கள் அதிகாரிகள் குழுவினர், சீனாவுக்கு சென்று ரயிலை ஆய்வு செய்தனர்.சீனாவில் இருந்து ஜனவரி 20ல், ரயில் கப்பலில் அனுப்பப்பட்டது. பிப்ரவரி நடுவிலோ அல்லது இறுதியிலோ, சென்னை துறைமுகத்தை வந்தடையும் வாய்ப்புள்ளது. அங்கிருந்து சாலை வழியாக, பெங்களூரின், ஹெப்பகோடி டிப்போவுக்கு வரும். அதன்பின் மூன்று மாதம், சோதனை ஓட்டம் நடத்தப்படும்.மற்றொரு ரயிலும், விரைவில் சீனாவில் இருந்து வரும். பிப்ரவரியில் ரயில் வந்தாலும், செப்டம்பரில் ஆர்.வி.சாலை - பொம்மசந்திரா பாதையில், பொது மக்களின் போக்குவரத்து துவங்கும். இப்பாதையில் ஓட்டுனர் இல்லாத ரயில் இயங்கும். முற்றிலும் மின் மயமானதாகும். 'கமாண்ட் அண்ட் கன்ட்ரோல் ரூம்' மூலமாக நிர்வகிக்கப்படும்.ஓட்டுனர் இல்லாத ரயில், மணிக்கு 80 கி.மீ., வேகத்தில் இயங்கும் திறன் கொண்டதாகும். அனைத்து பெட்டிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். ஆரம்பத்தில் இருந்தே, ஓட்டுனர் இல்லாமல் இயக்கப்படாது. இரண்டு ஆண்டுகள் ஓட்டுனர் இருப்பார். அதன்பின் ஓட்டுனர் இல்லாமல் இயக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி