உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிமென்ட் குடோனில் ரூ.8.15 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: மும்பையில் இருவர் கைது

சிமென்ட் குடோனில் ரூ.8.15 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: மும்பையில் இருவர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மும்பையில் உள்ள சிமென்ட் குடோனில் இருந்து ரூ.8.15 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்து, பதுக்கிய 2 பேரை கைது செய்தனர்.மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஒரு சிமென்ட் குடோனில் மெபெட்ரோன் எனப்படும் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக புகாரின் அடிப்படையில் அங்கு மும்பை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.8.15 கோடி மதிப்புள்ள மெபெட்ரோன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பாந்த்ராவைச் சேர்ந்த சாதிக் சலீம் ஷேக் 28, மற்றும் மீரா சாலையில் வசிக்கும் சிராஜ் பஞ்ச்வானி 57 ஆகிய இருவரை போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.கடந்த வாரம் சாகினகாவில் உள்ள கஜுபாடா பகுதியில் ஷேக் என்பவர் பிடிபட்டார், அவரிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள மெபெட்ரோன் என்ற போதைப்பொருள்கள் மீட்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

வாய்மையே வெல்லும்
ஏப் 29, 2025 04:53

சாம்பிராணி புகையன்ஸ் அம்புட்டு திருட்டு பயல்களுக்கு ஒரே முழுநேர வேலை போதை பொருள் விற்பதே. கைகட்டிக்கொண்டு இந்தியா இனிமேல் இருந்தால் பேராபத்து. .. விழித்துக்கொள்ள அரசே .. உள்நாட்டு சதி இதனால் அபாயகரம் ஜாஸ்தி என எப்போது உணர்ந்து கொள்வாய்??. இதை நான் சொல்லியா உனக்கு தெரியவேணும்???. உளவுத்துறை மசால் வடை தின்றது போதும் . உள்ளடி வேலை செய்து நாட்டை நாசமாக்க உள்ள சதிகார கும்பலை உடனே அடக்கவும்.


thehindu
ஏப் 28, 2025 21:44

பாதைகளின் புகலிடமாகிவிட்டது இந்தியா


Ramesh Sargam
ஏப் 28, 2025 21:19

தமிழகத்தில் உள்ள குடோன்களில் இதைவிட அதிகம் கிடைக்கும். தமிழகம், போதைப்பொருட்கள் தலைநகரம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 28, 2025 21:15

கைதான இருவரில் ஒருவன் மூர்க்கன் .... நாட்டில் 15 சதவிகிதம் இருக்குற மூர்க்கனுங்க இந்த ஒரே சம்பவத்தில் 50 சதவிகிதம் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை