உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துவண்டு போனது துஷ்யந்த் சவுதாலா கட்சி : அடுத்தடுத்து எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.விற்கு ஒட்டம் ?

துவண்டு போனது துஷ்யந்த் சவுதாலா கட்சி : அடுத்தடுத்து எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.விற்கு ஒட்டம் ?

சண்டிகர்: ஹரியானா சட்டசபைக்கு நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அம்மாநில பிரதான கட்சியான துஷ்யந்த் சவுதாலாவின் ஜே.ஜே.பி., கட்சி எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து பா.ஜ., நோக்கி படை எடுக்கின்றனர்.ஜம்மு-காஷ்மீர் , ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலை நேற்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் 90 இடங்களை கொண்ட ஹரியானா சட்டசபைக்கு அக். 01ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8d6x31ce&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இம்முறை ஹரியானாவில் பா.ஜ., காங்., ஜே.ஜே.பி., மற்றும் ஆம் ஆத்மி என நான்குமுனை போட்டி என்ற நிலையில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.ஹரியானாவில் தற்போது ஆளும் பா.ஜ., முதல்வர் நாயாப் சிங் சைனி தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றிருந்த துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜே.ஜே.பி எனப்படும் ஜனநாயக ஜனதா கட்சி கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென ஆதரவை வாபஸ் பெற்றது. இதனால் பா.ஜ., பெரும்பான்மையை இழந்து ஆட்சி கவிழும் நிலைக்கு சென்றது. எனினும் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியை தக்கவைத்தார் முதல்வர் நயாப்சிங் சைனி.இந்நிலையில், இன்று துஷ்யந்த் சவுதாலாவின் ஜே.ஜே.பி., கட்சியைச் சேர்ந்த பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளனர்.இவர்கள் பா.ஜ.,வில் இணையை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Swaminathan L
ஆக 18, 2024 13:58

கட்சித் தாவல் தவறு என்றால் கட்சியோடு தாவலும் தவறு தான். தேர்தலுக்கு முன் ஆயிரம் கதைகள் சொல்லி ஒரு கட்சியை வசைபாடி மக்களிடம் ஓட்டு வாங்கி ஜெயித்த பின், கொஞ்ச நாளிலேயே விசை பாடிய கட்சியிடம் வசியப்படுவதும், வெளியிலிருந்து சப்போர்ட், வெளியே வெளியே போய் சப்போர்ட், விஷயங்களின் பேரில் சப்போர்ட் என்று பல்டி அடிப்பதும் தவறு தான்.


Narayanan Muthu
ஆக 17, 2024 20:56

பாஜகவுக்கு கைகொடுத்ததின் பலனைJJP கட்சி அறுவடை செய்கிறது. பாஜகவை நம்பி மோசம் போன மாநில கட்சிகளில் JJP உம் இடம் பிடித்துவிட்டது. ஆந்திர NCP மற்றும் பீகார் NK இன்னும் பாடம் படிக்கவில்லை என்றல் இனியாவது உஷாராக இருக்கவேண்டியது அவசியம்.


R SRINIVASAN
ஆக 17, 2024 22:16

இந்திரா செய்யாததையா பிஜேபி செய்து விட்டது. கல்கத்தாவில் நடந்த அட்டூழியத்தை பத்ரி பேச துப்பில்லை .மேற்கத்திய நாடுகளுடன் கூட்டு சேர்ந்து இந்தியாவை துண்டாட நினைக்கும் காங்கிரஸ் துரோகிகள் தேவையில்லை.


ஆரூர் ரங்
ஆக 17, 2024 20:44

தேவிலால் சவு‌தாலா குடும்பமே அரசியலில் செல்லாக்காசு ஆகிவிட்டது. எதிர்காலம் கருதி மற்றவர்களும் வெளியேறிவிடுவார்கள்.


S BASKAR
ஆக 17, 2024 19:45

மத மாற்ற தடை சட்டம் வேண்டும். ஓகே. அதுபோலவே ஒரு கட்சியில் இருந்து வேறு கட்சிக்கு தவினால் தற்போது உள்ள பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மேலும் அதற்கு பின் 7 ஆண்டுகளுக்கு அடுத்த கட்சிக்கு செல்ல கூடாது என்று ஒரு சட்டம் கொண்டு வரலாம்


முருகன்
ஆக 17, 2024 19:45

இந்த அரசியலை மக்கள் நிராகரிக்க வேண்டும் இதனை நாடு முழுவதும் ஒரு கட்சி செய்ய நினைப்பது தவறு


Ganesun Iyer
ஆக 17, 2024 21:29

ஜெயலலிதாவுக்கு அப்பறம் அதிமுகல இருந்து தீமுகவுக்கு வந்து மந்திரியானா பரவாயில்லயா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை