உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜீவனாம்சம் கொடுப்பது கணவரின் கடமை: ஐகோர்ட்

ஜீவனாம்சம் கொடுப்பது கணவரின் கடமை: ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ : விவாகரத்து பெற்ற கணவருக்கு வேலை இல்லாவிட்டாலும், நீதிமன்ற உத்தரவின்படி, அவரது முன்னாள் மனைவிக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் வழங்க வேண்டியது, அவரது கடமை என, அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தர பிரதேசத்தின் லக்னோவை சேர்ந்த ஜோடி, 2015ல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், கணவர் மற்றும் மாமனார் - மாமியார் மீது வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்த மனைவி, 2016ல் தாய் வீட்டுக்கு சென்றார். இவர்களுக்கு லக்னோ குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. அந்த உத்தரவில், விவாகரத்து பெற்ற கணவர், தன் மனைவிக்கு ஜீவனாம்சமாக மாதம் 2,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் கணவர் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில், தன் மனைவி ஆசிரியர் பணி செய்து, மாதம் 10,000 ரூபாய் சம்பாதிப்பதாகவும், தனக்கு உடல்நிலை சரியில்லாததால் வேலைக்கு செல்ல முடியாத நிலை இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து, மாதந்தோறும் ஜீவனாம்சம் வழங்குவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி கோரினார்.

மனுவை விசாரித்த நீதிபதி ரேணு அகர்வால் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரின் மனைவி மாதம் 10,000 ரூபாய் சம்பாதிப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரர் தவறிவிட்டார். மேலும், அவரது உடல்நிலை நன்றாகவே உள்ளது. அவர் கூலி வேலை செய்தாலும் நாள் ஒன்றுக்கு 300 முதல் 400 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். அப்படியிருக்க, மாதம் 2,000 ரூபாய் ஜீவனாம்சமாக அளிக்க வேண்டியது மனுதாரரின் கடமை. அதில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்க முடியாது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

பேசும் தமிழன்
ஜன 29, 2024 22:08

ஆணும் பெண்ணும் சமம் எனும் போது.... சட்டம் மட்டும் ஒரு சார்பாக இருப்பது ஏன் ??? யார் வேலை செய்கிறார்களோ.... அவர்கள் அடுத்தவருக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும்.


sankaran
ஜன 29, 2024 17:48

கணவன் எங்கேயாவது ஓடி போவது நல்லது... அப்போதான் தப்பிக்க முடியும்...சட்டம் வகுத்தவர்கள் பழைய சமுதாய நிலை படி, சட்டங்கள் எழுதியிருக்கலாம்...சட்ட திருத்தங்கள் தேவை படுகிறது...இல்லை என்றால் பல பிரச்னைகளை நீதி மன்றங்களே உருவாக்குகிறந


mrsethuraman
ஜன 29, 2024 14:49

கணவனால் கூலி வேலை செய்ய முடியும் என்று கண்டுபிடித்தவருக்கு மனைவியாலும் வேலை செய்து தன்னை காப்பாற்றிலொள்ள முடியும் என்று ஏன் தெரியவில்லை?தற்போது இருக்கும் சட்டங்கள் திருத்தப்படவேண்டும்.வசதியான பார்ட்டியை திருமணம் செய்து கொள்ள வேண்டியது, பின்பு ஏதாவது சாக்கு சொல்லி விவாகரத்து பெற வேண்டியது. பின் வாழ்நாள் முழுவதும் எந்த பொறுப்பும் இன்றி எந்த வேலையும் செய்யாமல் மாதாமாதம் ஜீவனாம்சம் என்ற பெயரில் ஒரு தொகையை பென்ஷன் போல் பெற்றுக்கொள்வது .இப்படியே ஒரு குரூப் பெண்கள் இருக்கிறார்கள். விவாகரத்து பெற்ற பெண்ணின் வாழ்க்கையை பற்றி சிந்திக்கும் சட்டங்கள் விவாகரத்து பெற்ற ஆணின் வாழ்க்கையை பற்றி சிந்திப்பதில்லை . அவன் சமையலையும் வீட்டு வேலையையும் எவ்வாறு சமாளிப்பான் ?. கூடவே அவன் ஜீவனாம்சம் அழ வேண்டும் . ரொம்பவும் பரிதாபம் .


sridhar
ஜன 29, 2024 11:14

இன்றைய யதார்த்தம் என்ன - பெண்கள் தான் ரொம்ப தகராறு செய்து விவாகரத்து பெறுகிறார்கள். சில சமயம் பெண்களின் கள்ள தொடர்பு கூட காரணமாக அமைகிறது. ஒவ்வொரு விவாகரத்துக்கும் காரணம் ஆராய்ந்து பெண் மேல் தவறு என்றால் ஜீவனாம்சம் கூடாது, அது தான் நியாயம்.


Ramu
ஜன 29, 2024 10:53

இந்த பெண்தான் அவன்மீது பழிபோட்டு, இவனை பிரிந்து அவளது தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறாள். பின்பு கணவன் விவாகரத்து வாங்கியிருக்கிறான். இப்போ இருக்கும் சட்டப்படி, நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கிறது. இவன், அவளது வருமான ஆவணங்களை கண்டிப்பாக கொடுத்திருக்க வேண்டும். உண்மையில் இன்றைய சூழ்நிலையில் ஆண்கள் பியூஸ் போன பல்புகள்தான்.. எல்லாவிதங்களிலும் பாதிக்கப்படுவது ஆண்கள் மட்டுமே. யார் கண்டிடார்... ஆணுரிமை மீட்பு போராட்டங்கள் எதிர்காலத்தில் வர வாய்ப்புகள் அதிகம்.


வெள்ளைச்சாமி,தஞ்சை
ஜன 29, 2024 09:51

புருஷன் கூட சேர்ந்து வாழ துப்பில்லை இவளுகளுக்கு ஜீவனாம்சம் ஒரு கேடு...


Sampath Kumar
ஜன 29, 2024 09:20

ஜீவனை வைத்தபோது மனைவிமார்களின் கடமை என்று அடுத்த தீர்ப்பு வரும் பாருங்க இன்டர் சூழல் பெண்களும் சம்பாதிக்கிறார்கள் அதை உன்னார்ந்து தீர்ப்பு சொன்னால் நல்ல இருக்கும யுவர் ஹானர்


GMM
ஜன 29, 2024 07:48

சமூக பழக்க வழக்கங்கள் படி, மறுமணம் செய்யாத பெண் ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு. (மனைவி 10000 சம்பாதிக்கும் போது ஜீவனாம்சம் கேட்க வாய்ப்பு இல்லை) . கணவர் கொடுக்க கடமை பட்டவர். வேலை இல்லை என்றாலும் உடல் உழைப்பு செய்து கொடுக்க வேண்டும். நீதிமன்றம் விலக்கு அளிக்க முடியாது என்று கூறியது நியாயமே.


பேசும் தமிழன்
ஜன 29, 2024 07:45

இது என்னடா சட்டம்... மனைவி வேலை செய்கிறாள்... சம்பாதிக்கிறான்... கணவன் வேலைக்கு செல்லவில்லை.... மனைவி தானே கணவன் செலவுக்கு பணம் கொடுக்க வேண்டும் ????


Ramesh Sargam
ஜன 29, 2024 06:48

ஒருவேளை விவாகரத்து பெற்ற மனைவி, வேறு ஒரு வசதியான ஆணுடன் மறுமணம் செய்துகொண்டால், அப்பவும், முந்தைய கணவர் ஜீவனாம்சம் கொடுக்கவேண்டுமா நீதிபதி அவர்களே???


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி