உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா வழியாக ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஐரோப்பிய நாடுகளுக்கு வர்த்தகம்: எவ்வளவு தெரியுமா?

இந்தியா வழியாக ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஐரோப்பிய நாடுகளுக்கு வர்த்தகம்: எவ்வளவு தெரியுமா?

புதுடில்லி: உக்ரைன் மீதான போருக்குப் பின்னர் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஐரோப்பிய நாடுகள் தடைவிதித்தன. ஆனால், இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஐரோப்பிய நாடுகளுக்கு பெருமளவு விநியோகிக்கப்பட்டுள்ளது.உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஐரோப்பிய நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்தது.

115 சதவீதம்

ஆனால், இந்த விவகாரத்தில் நடுநிலை வகித்து ரஷ்யா உறவை இந்தியா பேணி வருகிறது. அதேபோல் மேற்கத்திய நாடுகளுடன் இந்தியா நல்லுறவை நீடித்து வருகிறது. ரஷ்யாவின் கச்சா எண்ணெய், இந்தியா மலிவு விலையில் கொள்முதல் செய்கிறது. உள்நாட்டில் சுத்திகரிக்கப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.போருக்கு முன்னர், ரஷ்யாவிடம் இருந்து 30 சதவீத கச்சா எண்ணெயை ஐரோப்பிய நாடுகள் வாங்கின. ஆனால், பொருளாதார தடை காரணமாக நேரடியாக வாங்க முடியவில்லை. இதனையடுத்து இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஐரோப்பிய நாடுகளுக்கு பெருமளவு வாங்கி வருகின்றன. அதன் படி, 2022ல் 1.11 லட்சம் பேரல் சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய், அந்நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்டது. இது, கடந்த ஆண்டு 2023ல் 2.31 லட்சம் பேரல் ஆக உயர்ந்தது. ஐரோப்பிய நாடுகளுக்கு முன் எப்பொதும் இல்லாத அளவில், இந்தியாவில் இருந்து 115 சதவீதத்துக்கும் மேல் கச்சா எண்ணெய் விநியோகிக்கப்பட்டுள்ளது.பொருளாதாரத் தடைகளால் ரஷ்ய பொருட்களின் கச்சா எண்ணெய் பெரும் இழப்பை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Raa
ஜன 16, 2024 13:13

மிகப்பெரிய ராஜ தந்திரி அமைச்சர் ஜெய்ஷங்கர். எதிர்தரப்பு சந்தர்ப்பவாதி என்று புலம்பும்.


Ganapathy A
ஜன 14, 2024 08:10

ஜெலன்ஸ்கி ஒரு சிரிப்பு நடிகர். அவரை ஆட்சிக்கட்டிலில் உட்காரவைத்தது உக்ரைன் மக்களின் தவறு. தனது நாட்டையே புதைகுழியில் தள்ளிவிட்டார். உடனே ரஷ்யாவுடன் சமாதானமாகப்னோனால் புத்திசாலி.


g.s,rajan
ஜன 13, 2024 23:41

மாற்று எரிபொருளுக்கு அணைத்து நாடுகளும் மிகவும் தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும் ,இந்தியாவில் கச்சாப்பொருள் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்


Suppan
ஜன 13, 2024 16:55

இந்தப் பொருளாதாரத்தடைகளெல்லாம் வேலைக்காகாது. பாதிக்கப்பட்டவர்கள் மாற்றுவழி கண்டுபிடித்துவிடுவார்கள். என்ன சற்று விலை கூட கொடுக்கவேண்டி வரும்.


Kalyan Singapore
ஜன 13, 2024 15:44

தடையால் ருசியாவுக்கு இழப்பு கச்சா எரிபொருள் விலை சரிவால் . ஐரோப்புக்கும் இழப்பு சுத்தீகரித்த கச்சா எரிபொருள் விலை உயர்வால் மற்றும் உள்ளூரில் சுத்தீகரிக்கப்படும் கச்சா எரிபொருள் விலை ( ரஸ்சியா அல்லாத நாடுகளிருந்து வாங்க வேண்டி வருவதால் ) உறவால் . யாருக்கு இதனால் பயன் கிடைக்கிறது ? இந்திய சுத்தீகரிப்பு ஆலைகளுக்கு .அதிலிருந்து வரும் லாபம் அரசுக்கு கிடைக்கிறதால் இந்திய மக்களுக்கு உலக பொருளாதாரம் சரியும் வெளியில் நம் ப்ரௌளாதாரம் வளர இதுவே காரணம் ( மற்றும் சீன பொருளாதாரம் -அவர்களும் ரஸ்சியாவிடமிருந்து பெருமளவில் கச்சா என்னை வாங்கி மாற்று பொருள்களை உற்பத்தி செய்து உலகுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள் ). குஜராத்தி என்றால் சும்மாவா ? மோடியின் வியாபார தந்திரமே இது . குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார் .போர் நீடிக்கும் வரை அமெரிசிவுக்கு ஆயுத ஏற்றுமதியும் நமக்கு சுத்தீகரிக்கப்பட்ட கச்சா எரிபொருள் ஏற்றுமதியும் தொடர வாய்ப்புள்ளது . வாழ்க போர் வளர்க்க இந்திய பொருளாதாரம்


R S BALA
ஜன 13, 2024 14:04

கச்சாஎண்ணெய் வழித்தடம் மாறியுள்ளது அதானே.. எப்படியோ இது நமக்கு சாதகம்தானே..


அப்புசாமி
ஜன 13, 2024 11:51

இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா என எல்லோரும் சேர்ந்து உக்ரைனை அடிச்சு நொறுக்குறாங்க. இவிங்க கிட்டே ஆதரவு கேட்பதை விட உக்ரைன் ரஷ்யாவோட சேர்ந்துக்கலாம். ஜெலன்ஸ்கிக்கு இதெல்லாமெப்போ புரியப் போகுதோ?


Barakat Ali
ஜன 13, 2024 10:48

ரஷ்யா கிட்டே எண்ணெய் வாங்கக்கூடாது ன்னு உக்ரைனும் ஐரோப்பிய நாடுகளும் சொல்லி வந்தன .... இரட்டை நிலைப்பாடு .... இதுல இந்தியாவுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி