உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் தேர்வில் சின்ன அலட்சியம் இருந்தாலும் ஆராய வேண்டும்: உச்சநீதிமன்றம்

நீட் தேர்வில் சின்ன அலட்சியம் இருந்தாலும் ஆராய வேண்டும்: உச்சநீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில், 'நீட் தேர்வில் 0.001 சதவீதம் யாராவது அலட்சியமாக இருந்தாலும் அதை முழுமையாக ஆராய வேண்டும்,' எனக்கூறியதுடன், நீட் முறைகேடு புகார் தொடர்பாக 2 வாரங்களில் விளக்கம் அளிக்குமாறும் தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.நடந்து முடிந்த மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஜூன் 18) விசாரணைக்கு வந்தபோது, ''நீட் தேர்வில் தவறு நடந்தால் மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் ஒப்புக்கொள்ள வேண்டும்,'' என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jctps7kx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேலும், ''நீட் தேர்வு விவகாரத்தில் 0.001 சதவீதம் யாராவது அலட்சியமாக இருந்தாலும் அதை முழுமையாக ஆராய வேண்டும். ஒரு தனிநபர் ஒட்டுமொத்த அமைப்புக்கும் ஆபத்தானவராக மாறி இருக்கக்கூடிய சூழலை யோசித்துப் பார்க்க வேண்டி இருக்கிறது'' எனக் கூறியதுடன், நீட் முறைகேடு வழக்கில் மத்திய அரசு, தேசிய தேர்வு முகமை 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

venugopal s
ஜூன் 18, 2024 16:51

மறுபடியும் ஒரு முறை கரடி காறித் துப்பிய மொமெண்ட், ஆனால் அவர்களுக்கு தான் பழகிப் போய் விட்டதே!


Rengaraj
ஜூன் 18, 2024 16:45

தீர்ப்பு கொடுத்ததோடு வேலை முடிந்துவிடவில்லை ? அவை முழுமையாக பின்பற்றப்படுகின்றனவா என்பதிலும் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படவேண்டும். . ஒரு தேர்வுக்கு இப்படி கடுமை காட்டி எச்சரிக்கும் உச்ச நீதிமன்றம் மக்கள் நலன் சார்ந்த நாடுதழுவிய மிக பெரிய ஊழல் வழக்குகளுக்கும், மாநிலத்தில் நிலவும் அரசியல்வாதிகளின் லஞ்சம் மற்றும் ஊழல் வழக்குகளுக்கும் இதே போன்று கடுமையை காட்டலாமே ? உச்ச நீதிமன்றம் இதுநாள்வரை மத்திய மாநில அரசுகளுக்கு இட்ட உத்தரவுகள் என்னென்ன , அவற்றில் எவை முழுமையாக மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டன ? எத்தனை மாநில அரசுகளில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் கடைபிடிக்கப்படுகின்றன என்பதை உச்ச நீதிமன்றமே ஒரு வெள்ளை அறிக்கையாக மக்களுக்கு தனது இணையதளத்தில் வெளியிடலாமே ? மேல்முறையீட்டுக்கு சென்றாலும் நீதி / நியாயம் ஒன்றுதான் , தீர்ப்பு மாறாது என்ற நிலை வரவேண்டும் என்றால் குற்றத்தின் மீதான சட்டத்தின் பார்வையும் அதே சட்டத்தின் மீதான நீதிமன்றங்களின் / நீதியரசர்களின் பார்வையும் ஒரே நேர்கோட்டில் அமைய வேண்டும். அப்படி இல்லாவிட்டால் சட்டத்தின் ஷரத்துகள் குழப்பம் ஏதும் அடையாதவாறு மாற்றிஅமைக்கப்படவேண்டும்.


Kasimani Baskaran
ஜூன் 18, 2024 16:20

எட்டுக்கோடி பேரும் கையெழுத்து போட்டுக்கொடுத்தாலும் நீட்டை நீக்க முடியாது.


Krush
ஜூன் 18, 2024 14:24

காவேரி மணல் கொள்ளை - கொஞ்சம் கூட அலட்சியம் இல்லை... தீவிரவாதி தேர்தல் ஜெயிக்கலாம் - கொஞ்சம் கூட அலட்சியம் இல்லை.. போதை மருந்து கடத்தல் - கொஞ்சம் கூட அலட்சியம் இல்லை... கர்ர்ர்ர் தூ...


ஆரூர் ரங்
ஜூன் 18, 2024 13:55

சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளில் ஆயிரத்தில் ஒன்று தவறாக இருந்தாலும் தகுதியிழக்குமா?


ஆரூர் ரங்
ஜூன் 18, 2024 13:53

போலி சாதிச் சான்றிதழ்கள் மூலம் ஏராளமான மாணவர்களும் அரசுப் பணியாளர்களும் பிற்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை அனுபவிக்கின்றனர். முறைகேடுகளுக்கு ஏராளமாக இடமிருக்கிறது என்பதால் இடஒதுக்கீட்டை ரத்து செய்வார்களா? தவறுகளைக் களைவதற்கு பதில் நீட் தேர்வையே ரத்து செய்யக் கேட்பது இதே போலத்தான் உள்ளது.


Saai Sundharamurthy AVK
ஜூன் 18, 2024 13:24

ஆமாம் ! ஆனால், நீட் தேர்வை மட்டும் எக்காரணத்தினாலும் ரத்து செய்ய மாட்டோம் என்று திராவிட காதுகளில் ரத்தம் வழியும் படி கூறுங்கள் கணம் நீதிபதி அவர்களே !


மணியன்
ஜூன் 18, 2024 13:14

ஆனால் ரத்து செய்ய வேண்டியதில்லை.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை