உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முன்னாள் நீதிபதி லோக்பால் அமைப்பின் அடுத்த தலைவராக தேர்வு

முன்னாள் நீதிபதி லோக்பால் அமைப்பின் அடுத்த தலைவராக தேர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: லோக்பால் அமைப்பின் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம். கன்வீல்கர் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு உயரதிகாரிகள் உட்பட, உயர் பதவியில் உள்ளோர் தொடர்பான ஊழல்களை விசாரிக்கும், லோக்பால் அமைப்பு. இந்த அமைப்பின் தலைவராக முதல் தலைவராக, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, பினாகி சந்திர கோஷ், 66, நியமிக்கப்பட்டார்.இந்நிலையில் லோக்பால் அமைப்பின் அடுத்த தலைவர் நியமனம் தொடர்பாக பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்டோரை கொண்ட தேர்வு குழு ஆலோசனை நடத்தியது.இதையடுத்து லோக்பால் அடுத்த தலைவராக ஏ.எம். கன்வீல்கரை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தவிர சி.வி.சி. எனப்படும் மத்திய விஜிலன்ஸ் கமிஷனர், தேர்வும் நடைபெற்றதாக கூறப்படுகிறது.கடந்த 2002--ல் நடைபெற்ற குஜராத் கலவர வழக்கில் மோடி குற்றமற்றவர் என விடுவித்து பரபரப்பு தீர்ப்பு அளித்தவர் கனவீல்கர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை