உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தங்கவயல் ரயில் நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

தங்கவயல் ரயில் நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

தங்கவயல்: தங்கவயல் ரயில் நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். பெங்களூரு, 'ராமேஸ்வரம் கபே' ஹோட்டலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து, போலீசார் கடும் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.புலனாய்வுத் துறை ஆலோசனையின்படி தங்கவயலில் உள்ள பெமல் நகர், கோரமண்டல், உரிகம், சாம்பியன், மாரிகுப்பம் ஆகிய ரயில் நிலையங்களில் நேற்று வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் சகிதம் சோதனையில் ஈடுபட்டனர்.ரயில் நிலையங்களில் நடைமேடை, ஓய்வறை, சைக்கிள் ஸ்டாண்ட் உட்பட பல இடங்களில் சோதனை நடத்தினர். இதனால், ரயில் நிலைய பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. சந்தேகப்படும்படியாக யாராவது சுற்றி திரிந்தால், உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி