உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தானின் சதியை முறியடித்துள்ளோம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பளீச்

பாகிஸ்தானின் சதியை முறியடித்துள்ளோம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பளீச்

புதுடில்லி, ''எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் வாயிலாக, நம்மை வழிக்கு கொண்டு வரும் பாகிஸ்தானின் சதியை முறியடித்துள்ளோம். அவர்களுடைய அந்தக் கொள்கையை உதவாததாக மாற்றியுள்ளோம்,'' என, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

நேர்மை

நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நேற்று அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:நம் அண்டை நாடுகளுடன் நல்ல உறவுடன் இருப்பதையே நாம் விரும்புகிறோம். அதே நேரத்தில் அந்த அண்டை நாட்டின் நோக்கங்கள் நேர்மையானதாக இருக்க வேண்டும்.பல்வேறு பிரச்னைகளில் நம்மை வழிக்கு கொண்டு வருவதற்கு, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை, நம் அண்டை நாடான பாகிஸ்தான், தன் தேசிய கொள்கையாக பயன்படுத்தி வந்தது. ஆனால், அவர்களுடைய அந்த விளையாட்டில் நாம் பங்கேற்கவில்லை. இதனால் அந்தக் கொள்கையை, உதவாத ஒன்றாக மாற்றியுள்ளோம்.எல்லை தாண்டும் பயங்கரவாதத்தை பயன்படுத்தினால், பேச்சு நடத்துவதற்கு இந்தியா அழைப்பு விடுக்கும் என்று பாகிஸ்தான் கருதி வந்தது. அவர்களுடைய இந்த சதியை நாம் முறியடித்துள்ளோம்.காலிஸ்தான் பயங்கரவாதிகள் சுதந்திரமாக செயல்பட, வட அமெரிக்க நாடான கனடா இடம் கொடுத்துவிட்டது. இந்தியாவுக்கு எதிராக செயல்பட அனுமதி அளித்ததன் வாயிலாக, இரு நாட்டுக்கு இடையேயான துாதரக உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவின் அரசியல் விளையாட்டில் நாம் தோற்றுவிட்டதாக கூறப்படுவதை ஏற்க முடியாது.சீனாவுடனான உறவில், பல ஆண்டுகளாக, தவறான கண்ணோட்டத்துடன் நம் கொள்கைகள் இருந்ததே, தற்போதைய பிரச்னைகளுக்கு காரணமாகும்.முன்பு செய்த பல ஒப்பந்தங்கள், சமரசங்கள் மற்றும் சரணடையும் வகையிலான கொள்கைகளே, சீனாவுடனான தற்போதைய கொள்கைகள் தவறானவை என்ற கண்ணோட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்பு செய்த தவறுகள் சரி என்று கூறும் அளவுக்கு, கண்மூடித்தனமான கொள்கைகளும் சிலர் இன்றும் உள்ளனர்.

நம்பிக்கை

இந்தியா, 'விஸ்வ மித்ர' எனப் பொருள்படும் உலகின் நண்பன் என்ற அந்தஸ்தில் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மீதான உலக நாடுகளின் நம்பிக்கையே, இந்தியா மீதான கண்ணோட்டங்களை மாற்றியுள்ளது.'ஜி - 20' அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்று, உச்சி மாநாட்டை நடத்தினோம். மாநாட்டுக்கான பிரகடனம் முன்பே தயாரிக்கப்படவில்லை. கடைசி நேரத்தில் தயாரிக்கப்பட்டும், முழு ஆதரவுடன் அது வெளியிடப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ