உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சர்வதேச அமைப்புகள் தோல்வி: ஜெய்சங்கர் கவலை

சர்வதேச அமைப்புகள் தோல்வி: ஜெய்சங்கர் கவலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' பயங்கரவாத தாக்குதல் போன்ற சம்பவங்களுக்கு காரணமானவர்களை பொறுப்பேற்கச் செய்வதில், சர்வதேச அமைப்புகள் தோல்வியடைந்து வருகின்றன,'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.டில்லியில், ஐக்கிய நாடுகளின் 80 வது ஆண்டு கொண்டாட்டத்தில் ஜெய்சங்கர் பேசியதாவது: பயங்கரவாதத்திற்கு எதிரான ஐ.நா., ஆற்றும் எதிர்வினையை விட, ஐநா எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி மிச்சிறந்த உதாரணங்கள் உள்ளன.காஷ்மீரின் பஹல்காம் போன்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு பொறுப்பேற்கும் அமைபைபை, பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் வெளிப்படையாக பாதுகாக்கும் போது, ஐநாவின் பன்முகத்தன்மையின் நம்பகத்தன்மைக்கு என்ன செய்யும். குற்றம் செய்தவர்களை பொறுப்பேற்கச் செய்வதில், சர்வதேச அமைப்புகள் தோல்வியடைந்து வருகின்றன.உலகளாவிய திட்டம் என்ற பெயரில், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களையும், அதனை தூண்டிவிட்டவர்களையும் சமமாக மதிப்பிட்டால் உலகம் எவ்வளவு சுயநயலமானதாக இருக்கும். பயங்கரவாதிகள் என தங்களைத் தாங்களே அறிவித்துக் கொண்டவர்களை தடையில் இருந்து பாதுகாக்கும் போது, அதற்கு காரணமானவர்களின் நேர்மையை பற்றி என்ன சொல்கிறது.சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பராமரிப்பது வெறும் வாய் வார்த்தையாக மாறிவிட்டால், வளர்ச்சி மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்தின் இக்கட்டான நிலை இன்னும் பிரச்னையாகிவிடும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

spr
அக் 24, 2025 18:18

"உலகளாவிய திட்டம் என்ற பெயரில், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களையும், அதனை தூண்டிவிட்டவர்களையும் சமமாக மதிப்பிட்டால் உலகம் எவ்வளவு சுயநயலமானதாக இருக்கும். பயங்கரவாதிகள் என தங்களைத் தாங்களே அறிவித்துக் கொண்டவர்களை தடையில் இருந்து பாதுகாக்கும் போது, அதற்கு காரணமானவர்களின் நேர்மையை பற்றி என்ன சொல்கிறது." சிறப்பான கருத்தே நெஞ்சில் உரமும் நேர்மைத்திறமும் உள்ள இவர் போன்றோர் உதவிக்கு நிற்பதால்தான் மோடி பெருமை அடைகிறார்.


ஜெகதீசன், கோவில்பட்டி
அக் 24, 2025 17:59

இப்படி நச்சுன்னு உண்மையையும், பல விஷயங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டை உறுதியுடன் தெரிவிப்பதால் உங்களை ட்ரம்ப்புக்கு உங்களை பிடிக்கவில்லை போலும். அதே போல் மீடியாகாரர்களிடம் பேசும் போது தெளிவையும் உறுதியையும் காண்பிக்கிறீர்கள் அண்ணாமலை போல ... சபாஷ்


GMM
அக் 24, 2025 17:51

பிள்ளை ஒழுக்கம் மீது பெற்றோர் பொறுப்பு கூடாது. மாணவர் ஒழுக்கம் மீது ஆசிரியர் பொறுப்பு கூடாது. சமூக அமைப்பு, சங்கம், கூட்டுறவு சிலருக்கு பிடிக்காது. கொலை, கொள்ளை, குண்டு வெடிப்பு செய்து விட்டு பல காலம் தன் இனத்துடன் வாழமுடியும் என்றால், எந்த அமைப்பும் வெற்றி பெற முடியும் . ஜனநாயக நாடுகள் மித மிஞ்சிய மனித உரிமையில் மாண்டு விடும். சர்வாதிகார கம்யூனிச ஆதிக்கம் மீண்டு விடும். ? நமக்கு நாமே பாதுகாப்பு.


Anand
அக் 24, 2025 17:34

வலியவனை கண்டால் கூழைக்கும்பிடு போடுவதும், மெலியவனை கண்டால் ஏறி மிதிப்பதும் தான் இன்றைய சர்வதேச அமைப்புகளின் சாதனைகள்.


Sridharan P
அக் 24, 2025 17:31

இதை விட பாகிஸ்தானை பற்றி நேரிடியாக குறிப்பிட முடியாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை