உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆதாரங்களை கொடுக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை பாயும்

ஆதாரங்களை கொடுக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை பாயும்

தார்வாட், : ''காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, ரயில்வே துறை நிலம் ஏலம் விட்டதில் முறைகேடு நடந்ததாக குற்றஞ்சாட்டி உள்ளார். இதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்றால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.தார்வாட் மாவட்டம், ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, ரயில்வே துறை நிலம் ஏலம் விட்டதில் முறைகேடு நடந்ததாக குற்றஞ்சாட்டி உள்ளார். இதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்றால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கூறி உள்ளேன்.தங்களிடம் உள்ள நிலம், பயன்படாமல் இருந்தால், அதை குத்தகை அடிப்படையில் வழங்க ரயில்வே விதிகளில் இடம் உள்ளது. இந்த 13 ஏக்கர் நிலத்தை வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தவும், குறைந்தபட்சம் 83 கோடி ரூபாய்க்கு குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தவும் டெண்டர் கோரப்பட்டுள்ளது.முன்னதாக ஐந்து முறை டெண்டர் கோரப்பட்டபோதும், இடத்தைப் பெற யாரும் முன்வரவில்லை. இந்த இடத்தில் உள்ள வீடுகள், ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்டது. அதை அப்படியே விட்டால், யாரேனும் அத்துமீறி நுழைய வாய்ப்பு உள்ளது. அதற்கான இடத்தை குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கு காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்தால், ஒரு வேளை அவர்களின் பார்வை இடத்தில் இடத்தில் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.இந்த ஏல செயல்முறை ஆன்லைனில் உள்ளது. யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். நிலத்துக்கு நிர்ணயம் செய்யப்பட்ட விலை 83 கோடி ரூபாய்க்கு குறைவாக இருந்தால், காங்கிரஸ் 150 - 200 கோடி ரூபாய் கொடுத்து நிலத்தை பெற வேண்டுமா, இல்லையா?இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி