உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / " தேசிய கொடியுடன் செல்பி எடுங்க " - பிரதமர் மோடி அழைப்பு

" தேசிய கொடியுடன் செல்பி எடுங்க " - பிரதமர் மோடி அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: போதைப்பொருள் பிடியில் தங்களது குடும்பங்களும் சிக்கக்கூடும் என கவலைப்படுகின்றனர். அவர்களுக்கு உதவ சிறப்பு மையம் ஒன்றை மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.‛மன் கி பாத் ' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: ஒலிம்பிக் போட்டியில் நமது தேசியக் கொடியை உலகளவிற்கு எடுத்து செல்லவும், நாட்டிற்கு பெருமை சேர்க்கவும் நமது வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களை நீங்கள் உற்சாகப்படுத்த வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்னர் 100 நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட சர்வதேச கணித ஒலிம்பியாட்டில் இந்திய அணி 5வது இடத்தை பிடித்து உள்ளது.அசாமின் மொய்டாம்கள் உலக பாரம்பரிய சின்னமாக சேர்க்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் இருந்து யுனெஸ்கோ பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் இடம் இதுவாகும். இந்த இடத்திற்கு நீங்கள் சுற்றுலா வர வேண்டும்ஆக., 7 தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் கைத்தறி தயாரிப்புகள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது அதன் வெற்றியை காட்டுகிறது. முதல்முறையாக காதி பொருள் விற்பனை ரூ.1.5 லட்சம் கோடியை தாண்டியதுபோதைப்பொருள் புழக்கம் குறித்த சவால்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தங்கள் குழந்தையும் போதைபொருள் பிடியில் சிக்கக்கூடும் என கவலைப்படுகின்றனர். இப்போது அவர்களுக்கு உதவ ‛மனஸ்' என்ற சிறப்பு மையத்தை அரசு திறந்துள்ளது. இலவச தொலைபேசி எண் 1933 அறிமுகம் செய்துள்ளது. இதனை தொடர்பு கொண்டு மக்கள் தேவையான ஆலோசனையை பெறலாம்.நாளை புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. நமது கலாசாரத்தில் புலிகள் ஒரு அங்கம். புலிகள் மற்றும் மனிதர்கள் இடையே மோதல் இல்லாமல் பல கிராமங்கள் நமது நாட்டில் உள்ளன. உலகளவில் 70 சதவீத புலிகள் இந்தியாவில் உள்ளன. ஆக., 15 அன்று, கடந்தாண்டை போல் இந்தாண்டும் தேசியக் கொடியுடன் செல்பி எடுத்து சமூகவலைதளங்கள் மற்றும் ஹர்ஹர் திரங்கா இணையத்தில் பதிவேற்றம் செய்யவும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

முருகன்
ஜூலை 28, 2024 23:52

இதனால் மக்கள் பிரச்சனைகள் முடிவுக்கு வருமா ? தேசப்பற்று ஒவ்வொரு இந்தியா குடிமகன் மனதிலும் உள்ளது


அப்பாவி
ஜூலை 28, 2024 22:25

ரயில்வே ஸ்டேஷன்ல மோடி.படம் வெச்சு செல்ஃஇ எடுத்துக்கச் சொன்னவங்க. இப்போ தேஷ்பக்தியை ஊட்டறாங்க.


ஆ.செந்தில்குமார், முழு நேர சங்கி
ஜூலை 28, 2024 20:05

please stop your drama


SANKAR
ஜூலை 28, 2024 22:02

அதை ஓட்டு போட்டவங்க சொல்லட்டும்..நீங்க வழக்கம்போல..xxxxx நிதி வாழ்க கோஷம் போடலாம்


a.u chandrasekaran
ஜூலை 28, 2024 16:11

whether they have voted for bjp or not the Pm should visit every state often and discuss with the concerned person and rectify the problems. this is the only solution for a true politician in Gandhi way


SANKAR
ஜூலை 28, 2024 22:11

we dont want any PM to act in Gandhian way. We wantbthe PM to treat all the people impartially. Mohandas karamsanth and Jawaharlal did not treat people like that.. Esp. karamsanth was very partial towards hindus and did a great injustice to Hindus.. Because of him, the nation was divided..and hindu massacre happened in Bengal..


Jysenn
ஜூலை 28, 2024 16:07

No action. WB, TN , Punjab and Delhi are begging for action. A mute spectator.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 28, 2024 15:30

சில பேரு செய்யமாட்டாங்க ..... அப்படி செஞ்சிதான் தேசபக்தியை நிரூபிக்கணுமா ன்னு கேக்குறாங்க..... அவங்க யார் யாருன்னு மத்தவங்களுக்கு அடையாளப் படுத்தி காட்ட ஆசைப்படுறாரு .....


தமிழன்
ஜூலை 28, 2024 15:27

செல்பி எடுக்க நேரம் இல்லை..


SANKAR
ஜூலை 28, 2024 22:13

ஆமாம்..துருக்கிய வந்தேறிகளுக்கு..நமது தேசியக்கொடியை வைத்து selfie எடுக்கவெல்லாம் நேரமிருக்காது..பாக் ஜிந்தாபாத் சொல்லவும்..பாக் கொடியைப்பிடிக்கவும் நிறைய நேரம் இருக்கும்


Ravi
ஜூலை 28, 2024 14:13

Trying to keep the people emotionally engaged and do whatever they wish. It is like keeping us as LKG students.


கோபால கிருஷ்ணன்
ஜூலை 28, 2024 15:53

இதில் என்ன எமோஷ்னல் இருக்கு ....தேசிய கொடியை பிடித்து செல்ஃபி எடுக்க சொன்னார் அவ்வளவே....என்னமோ பாஜக கொடி பிடித்து செல்ஃபி எடுக்க சொன்ன மாதிரியும், அப்படி எடுத்தால் தான் தேச பக்தி இருப்பதுபோல் ஆகும் என்று பதறுகிறீரே....இதில் எமோஷனல் எங்கு வருகிறது....முதலில் மோடி வெறுப்பை விட்டு விட்டு.... உண்மை நியாயத்தின் படி யோசியுங்கள்!!!


Tirunelveliகாரன்
ஜூலை 28, 2024 13:57

கமெண்டுகளை பார்க்கும்போது தெரியுது, நம் மக்கள் நன்றாக விளங்கி விட்டார்கள். எல்லோருக்கும் பசிக்க/புரிய ஆரம்பித்து இட்டது. இனிமேல் இது மாதிரி பேசும் உங்க பருப்பு வேகாது.


Swamimalai Siva
ஜூலை 28, 2024 13:48

200 வாங்கியாச்சு


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை