உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தனித்து போட்டியிடுவதாக பரூக் அப்துல்லா அறிவிப்பு: இண்டியா கூட்டணிக்கு இன்னொரு சறுக்கல்

தனித்து போட்டியிடுவதாக பரூக் அப்துல்லா அறிவிப்பு: இண்டியா கூட்டணிக்கு இன்னொரு சறுக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: 'இண்டியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தங்களது மாநிலங்களில் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்த நிலையில் ஜம்மு காஷ்மீரிலும் தேசிய மாநாட்டு கட்சி தனித்து போட்டியிடும் என அதன் தலைவர் பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார். இது இண்டியா கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.லோக்சபா தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 'இண்டியா' என்ற கூட்டணியை உருவாக்கின. இதில் இடம்பெற்றுள்ள கட்சிகள் நாடு முழுவதும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதுடன், பா.ஜ.,வை வீழ்த்துவதை நோக்கமாக கொண்டிருந்தன. தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் மேற்குவங்கத்தில் அனைத்து தொகுதிகளிலும் தாங்களே போட்டியிடுவோம் என அம்மாநில முதல்வரும் திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்தார். அதிலிருந்து குழப்பம் ஆரம்பமானது. அடுத்ததாக பஞ்சாபிலும் ஆம்ஆத்மி தனித்து போட்டியிடும் என அறிவித்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cstza45q&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கிடையே ஐக்கிய ஜனதா கட்சி தலைவர் நிதீஷ்குமார் இண்டியா கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கியமானார். டில்லியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சீட் மட்டும் ஒதுக்க ஆம்ஆத்மி முன்வந்தது. இப்படி பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்குவதற்கு கூட்டணி கட்சிகளே தயங்கி வருகின்றன. அதேநேரத்தில் தனித்து போட்டியிட்டாலும், இண்டியா கூட்டணியிலேயே நீடிப்பதை இந்த கட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன.

பரூக் அப்துல்லா

இந்த நிலையில் காஷ்மீரில் உள்ள தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, ஜம்மு காஷ்மீரில் தங்கள் கட்சி தனியாக தான் போட்டியிடும் என அறிவித்துள்ளார். தற்போது ஸ்ரீநகர் தொகுதி எம்.பி.,யாக உள்ள பரூக் அப்துல்லா, ''பார்லிமென்ட் தேர்தலுடன் இரு மாநிலங்களிலும் தேர்தல் நடத்தப்படும் என்று நினைக்கிறேன். இண்டியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டதால், தேசிய மாநாட்டு கட்சி தனித்து போட்டியிடும், அதில் எந்த சந்தேகமும் இல்லை'' எனத் தெரிவித்தார்.கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்காமல் ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியாக போட்டியிடுவது இண்டியா கூட்டணிக்கு தொடர் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பரூக் அப்துல்லாவின் முடிவு குறித்து காங்., மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ''பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஒவ்வொரு கட்சிக்கும் சொந்த விருப்பங்கள் உள்ளன. தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை இண்டியா கூட்டணியின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன; தொடர்ந்து அப்படியே இருக்கும்'' என விளக்கமளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி