உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அரசால் விவசாயிகளுக்கு உரத்திற்கான செலவு குறைவு: நிர்மலா சீதாராமன்

மத்திய அரசால் விவசாயிகளுக்கு உரத்திற்கான செலவு குறைவு: நிர்மலா சீதாராமன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மத்திய அரசு முழு பொறுப்பு ஏற்றுக் கொண்டு உள்ளதால், விவசாயிகள் உரத்திற்காக குறைந்தளவு செலவு செய்கின்றனர் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது: 3 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்க அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் மோடி எடுத்து வருகிறார். சிறு விவசாயிகள் நலனுக்காகவும் பிரதமர் உழைத்து வருகிறார். உரத்திற்கான செலவு ரூ.300ல் இருந்து ரூ.3 ஆயிரமாக அதிகரித்து உள்ளது. ஆனால், விவசாயிகள் ரூ.300 மட்டுமே செலவு செய்கின்றனர். இதற்கு மத்திய அரசு பொறுப்பை ஏற்றுக் கொண்டதே காரணம். விவசாயிகள் பிரச்னையில் நேர்மையாக செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

hari
பிப் 24, 2024 05:49

டாஸ்மாக் அடிமைகளின் ஓலங்கள்........ மிக சிறப்பு....


திகழ்ஓவியன்
பிப் 23, 2024 21:13

திருடனிடம், திருட்டில் பங்கு வாங்குவது இலஞ்சத்தை விட மேலானதா கீழானதா?


Priyan Vadanad
பிப் 24, 2024 02:51

என்ன பாஜக அப்படி எதுவும் செய்து வருகிறதா?


Kumar
பிப் 23, 2024 19:50

அம்மா பொட்டாஷ் என்ன விலைபூச்சி மருந்து என்ன விலை


Priyan Vadanad
பிப் 24, 2024 02:53

நீங்க வேற. பயிரில் பூச்சி விழுந்தால் பூச்சி வரி என்று போட்டுவிடுவார்.


மேலும் செய்திகள்