உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி விமான நிலைய மேற்கூரை இடிந்த விபத்தில் எப்.ஐ.ஆர். பதிவு

டில்லி விமான நிலைய மேற்கூரை இடிந்த விபத்தில் எப்.ஐ.ஆர். பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் கனமழையால் விமான நிலைய மேற்கூரை சரிந்து விழுந்த சம்பவத்தில் ஒருவர் பலியானதை தொடர்ந்து போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.தலைநகர் புதுடில்லியில் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இரவு பெய்ய துவங்கிய மழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கி வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள மழைநீரில் வாகனங்கள் சிக்கியதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.இந்நிலையில் கனமழை காரணமாக டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 1-ல் மேற்கூரை திடீரென சரிந்து விழுந்ததில் ஒரு பலியானார். 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கார்களும் பலத்த சேதமடைந்தன.இதையடுத்து அடையாளம் தெரியாத நபர் மீது டில்லி போலீசார் எப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். டெர்மினல் 1 பகுதியில் விமான சேவை நிறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்புசாமி
ஜூன் 29, 2024 09:51

புத்திசாலிங்க. இடிஞ்சு விழுந்த கூரை மேலேயே எஃப்.ஐ.ஆர் போட்டிருப்பாங்க.


J.Isaac
ஜூன் 28, 2024 20:20

பராமரிப்பு தனியாரிடம் தானே?


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை