உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விமானபடை தினத்தில் பெண்களின் ஸ்கைடைவிங் நிகழ்ச்சி

விமானபடை தினத்தில் பெண்களின் ஸ்கைடைவிங் நிகழ்ச்சி

புதுடில்லி: இந்திய விமானப்ப‌ைடையின் ஆண்டு விழாவில் பெண்கள் மட்டுமே பங்கு‌ பெறும் ஸ்கை டைவிங் நிகழ்ச்சி இடம்பெறுகிறது. வரும் சனிக்கிழமையன்று இந்திய விமானப்படையின் ஆண்டு விழா நடைபறெ உள்ளது. இவ்விழாவில் விமானப்டையில் இடம்பெற்றுள்ள அதிநவீன போர் விமானங்கள் மற்றும் வானில் விமானங்களின் சாகசங்கள் போன்றவை பொதுமக்களின் பார்வைக்கு விருந்தாக அமையும். இந்தாண்டு வித்தியாசமாக முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பங்குபெறும் ஸ்கைடைவிங் எனப்படும் வானில் சில நிமிடங்கள் நடத்தப்படும் சாகச நிகழ்ச்சி இடம்பெறஉள்ளது. இது குறித்து ஸ்கைடைவிங் கில்பங்கு பெறும் ஆஷாஜோதிர்மயி தெரிவித்திருப்பதாவது: இந்த நிகழ்ச்சி முதன் முறையாக பெண்களால் முதன்முறையாக ‌பொது மக்களின் முன்பாக நடத்தப்பட உள்ளது. இதில் ஆறு பெண்கள் ஸ்கைடைவிங் சாகச நிகழ்ச்சியை நடத்த உள்ளனர். வானில் சுமார் 8 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் விமானத்தி்ல் இருந்து ஒருவர்பின் ஒருவராக வெளியேறி வானில் சில நிமிடங்கள் நட்சத்திர வடிவமாக ஜொலிக்க உள்ளனர் என தெரிவித்தார். இந்த சாகச நிகழ்ச்சியில் வயது தடையேதுமில்லை என்பதற்கு இதில் இடம்பெற்றுள்ள ஸ்வரூப் என்ற பெண்மணியே உதாரணம் காரணம் இவருக்கு இரு குழந்தைகள் உள்ளன என ஜோதிர்மயி தெரிவித்தார். தற்போது உள்ள குழுவினர் விமானப்படை தினத்திற்காக மட்டும் பயிற்சிகளை எடுத்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல் அடுத்து வர உள்ள சர்வதேசராணுவ விளையாட்டுகளிலும் தங்களின் திறமையை வெளிப்படுத்த தயாராகி வருவதாக தெரிவித்தார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை