உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மீனவர்கள் விரைவில் விடுவிப்பு: ஜெய்சங்கர் உறுதி...

மீனவர்கள் விரைவில் விடுவிப்பு: ஜெய்சங்கர் உறுதி...

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விரைவில் விடுவிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக, முதல்வர் ஸ்டாலினுக்கு, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்துள்ளார்.தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற நான்கு மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கடந்த 18ல் கைது செய்தனர். இவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மூன்று முறை கடிதம் எழுதினார்.

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதில்:

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விரைவில் விடுவிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் நலனில் மத்திய அரசு என்றும் அக்கறை கொண்டுள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

shan
ஜூன் 28, 2024 14:36

மீனவர்கள் திக ஆட்சியில் வந்ததும் கடத்தல் பேர் வழிகள் எல்லாரும் மீனவராக மாரி இலங்கைக்கு போதை பொருள் கடத்த செல்கிறார்கள் அங்கிருந்தும் கடத்தல் செய்து கொண்டு வருகிறார்கள் தங்கத்தை இவர்களை குறைந்தது இரண்டு வருஷம் களைத்து விடணும் ஏன் அடுத்தவன் எல்லைக்குள் நுழைகிறார்கள் நம்ம வீட்டில் அடுத்தவர் நுழைந்தால் விடுவீர்களா


தமிழ்வேள்
ஜூன் 28, 2024 13:02

பாரத கடற்படை வீரரை வேற்றுநாட்டு மீனவன் கொலை செய்தால், பாரத அரசு சும்மா விடுமா ? இலங்கை கடற்படை வீரரை கொலை செய்த தமிழக மீனவனை அவர்கள் உடனடியாக விடுதலை செய்வார்களா?


மீனவநண்பன்
ஜூன் 28, 2024 11:25

சீக்கிரம் விடுவிச்சு அவிங்க வந்து சேர்ந்ததும் புது பேட்ச் நுடுந்தீவுக்.கடலில் மீன்பிடிச்சு கைதாகும். அவிங்களுக்கும் ஆண்ட்டிசிபேட்டரி பெயில் வாங்கிக்.குடுங்க.


Oviya Vijay
ஜூன் 28, 2024 07:54

தமிழக மீனவர்கள் அல்ல... இது முற்றிலும் தவறு... தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் என்பதே சரி...


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை