உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிராக்டர் மீது கார் மோதி நால்வர் பலி

டிராக்டர் மீது கார் மோதி நால்வர் பலி

பாகல்கோட், -டிராக்டர் மீது கார் மோதியதில், நால்வர் உயிரிழந்தனர்.விஜயபுராவின், ஹொனகனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சிலர், நேற்று முன்தினம் இரவு, பாகல்கோட்டுக்கு காரில் புறப்பட்டனர்.பாகல்கோட், பீளகியின், அனகவாடி கிராமத்தின் அருகில், ஹூப்பள்ளி - சொல்லாபுரா தேசிய நேடுஞ்சாலையில், நேற்று அதிகாலை வேகமாகச் சென்ற கார், சாலை ஓரத்தில் நின்றிருந்த டிராக்டர் மீது மோதியது.காரில் இருந்த ஓட்டுனர் மல்லு பூஜாரி, 24, கல்லப்பா கவுடகி, 34, காமாட்சி படிகார், 35, துகாராம் தளேவாட், 30, ஆகியோர் உயிரிழந்தனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் பார்வையிட்டனர்.பீளகி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ