உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குப்பை அள்ளும் ரோபோ: ஆனந்த் மஹிந்திரா ஆர்வம்

குப்பை அள்ளும் ரோபோ: ஆனந்த் மஹிந்திரா ஆர்வம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: நீர்நிலைகளை தானியங்கி முறையில் சுத்தப்படுத்தும் ரோபோவை கண்டுபிடிக்கும்படி, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களை மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹேந்திரா வலியுறுத்தி உள்ளார். அதற்கு தேவையான முதலீடுகளை செய்ய ஆர்வமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.நீர் நிலைகளை சுத்தப்படுத்தும் பணியில் தானியங்கி ரோபோக்களை களமிறக்கி சீனா சோதனை ஓட்டம் பார்த்து வருகிறது. அங்குள்ள சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த நிறுவனம் 'ஹெபாவோ' என்ற பெயரில் இந்த ரோபோக்களை தயாரித்து உள்ளது. இந்த ரோபோக்களை நீர்நிலைகளில் விட்டால் அவை தானாகவே ரோந்து சென்று எங்கெல்லாம் குப்பைகள் மிதக்கிறதோ அவற்றை சேகரித்து திரும்பும். சீனாவின் ஜின்ஷா நதி, புஜியாங் நதி, ஜியாலிங், கிங்கி உள்ளிட்ட நதிகளில் விட்டு சோதனை செய்ததில், அதன் செயல்பாடு சிறப்பாக இருந்தது.இந்த ரோபோக்கள் நதியை சுத்தப்படுத்தும் வீடியோவை மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா தன் சமூக வலைதளத்தில் வெளியிட்டு, 'இது போன்ற சாதனங்கள் நம் நாட்டுக்கும் தேவை, இவற்றை ஏதேனும் ஸ்டார்ட் அப்கள் தயாரித்தால், தான் முதலீடு செய்ய தயார்' என, கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

g.s,rajan
பிப் 04, 2024 09:02

ஏ.ஐ அரசியல்வாதிகளை நமது நாட்டில் அதிரடியாக உருவாக்க வேண்டும், அவ்வாறு உருவாக்கினால் லஞ்சம் மற்றும் ஊழல் முற்றிலும் ஒழிந்துவிடும், ஏழை நாடான இந்தியாவில் மக்களின் வரிப்பணத்தை பல லட்சம் கோடிகளில் அரசியல்வாதிகளுக்கு செலவு செய்து வீணாக்குவது கட்டாயம் தடுக்கப்படவேண்டும் .


ராஜா
பிப் 04, 2024 08:22

சரி பொறுப்பற்ற முறையில் குப்பைகளை போடும் மடையர்களை என்ன செய்வது? நாட்டின் சட்ட திட்டங்களை சரி செய்யாமல் மத மூட நம்பிக்கையால் டஜன் கணக்கில் கட்டுப்பாடு இன்றி மத பெற்று விடுவதால் வந்த வினை தான் பாதி.


spr
பிப் 04, 2024 08:07

பாராட்டுவோம் இதே போல பாதாளச் சாக்கடைகளில் அடைப்பை நீக்க மனிதன் அதனுள்ளே முக்குளித்துத்தான் குப்பைகளை அடைப்புக்களை நீக்க வேண்டுமே என்றில்லாமல் அதனையும் இயந்திர மயமாக்க முயற்சி எடுக்கட்டும் இன்னமும் ரெயில் தடங்களில் மனிதக் கழிவுகளை மனிதன் குறிப்பாகப் பெண்களே கழுவி அகற்ற வேண்டியுள்ளது என்று ரெயில் பெட்டிகளில் நாற்றம் இல்லாத நிலை என்று வருகிறதோ அன்றுதான் இந்திய ஒரு வளர்ந்த நாடு சந்திரனுக்கோ செவ்வாய் சூரியன் என்றெல்லாம் விண்கலம் அனுப்பு முன்னர் இது போன்ற அன்றாட நிகழ்வுகளில் கவனம் மேற்கொள்ள வேண்டும் அதுதான் ஒரு வளர்ந்த நாட்டின் அடையாளம்


Ramesh Sargam
பிப் 04, 2024 07:32

அப்படியே அரசியல் குப்பைகளையும் அகற்ற ஒரு ரோபோ தயாரிக்க இளைஞர்கள் முன்வரவேண்டும். அந்த நிறுவனத்திற்கு நான் சம்பளம் இல்லாமல் பணி செய்வேன்.


g.s,rajan
பிப் 04, 2024 07:15

குப்பைகளை எப்படிக் கையாள்வது என்பது தெரியாமல் பல உலக நாடுகள் திணறிவருகின்றன ,இந்தியாவில் அனைவரின் பொறுப்பற்ற செயல்களால் சுயநலத்தால் குப்பைகள் நாளுக்கு நாள் எங்கும் மலை போல் குவிந்து வருவது மலைப்பை ஏற்படுத்துகிறது,குறிப்பாக சுற்றுப்புற சூழல் சீர் கெட்டு பல்வேறு வியாதிகள் பரவக் காரணம் ஆகிறது ,குப்பைகளை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பது தான் நமக்கு மிகப் பெரிய சவால்....


ßß
பிப் 04, 2024 07:11

ஆனந்த் மஹிந்திரா நல்ல முயற்சிகளுக்கு ஆதரவளிக்கக் கூடிய நல்ல உரிமையாளர் நல்ல டீம் லீடர் தேசபக்தர் வாழ்த்துக்கள்


Kasimani Baskaran
பிப் 04, 2024 06:42

குப்பை போடுவோரின் எண்ணிக்கையை முதலில் குறைக்க வேண்டும். பள்ளியில் சுத்தத்தை அறிமுகப்படுத்த வேண்டும். குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடுவதை ஒரு இயக்கமாகவே செயல்படுத்த வேண்டும். இல்லை என்றால் அனைத்து முயற்சிகளும் கிழிந்த துணிக்கு ஒட்டுப்போடுவதேயாகும்..


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ