உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதாப் சிம்ஹாவுக்கு நல்ல புத்தி கொடுக்கட்டும்

பிரதாப் சிம்ஹாவுக்கு நல்ல புத்தி கொடுக்கட்டும்

பெங்களூரு,- நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் பைரதி சுரேஷ், பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:மைசூரு பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹாவுக்கு, இந்த முறை சீட் ஏன் கொடுக்கவில்லை என்று, என்னிடம் தகவல் இல்லை. அது பா.ஜ., கட்சியின் உள்விவகாரம். பிரதாப் சிம்ஹாவுக்கு கொஞ்சம் நாவடக்கம் தேவை.காங்கிரஸ் அரசு, முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக பேசி வந்தார். நானே சிறந்த எம்.பி., என்று கூறினார். இரண்டு முறை எம்.பி., ஆனதும், பதவி, அதிகாரம் அவருக்கு தலைக்கு ஏறியது.இதனால் சக அரசியல்வாதிகளை மதிக்காமல், வாய்க்கு வந்தபடி பேசினார். இதற்கு பரிசாக அவருக்கு எம்.பி., சீட் கிடைக்காமல் போய் உள்ளது. சக அரசியல்வாதிகளை மதிக்காவிட்டால் என்ன நடக்கும் என்பதற்கு, பிரதாப் சிம்ஹா உதாரணம். சாமுண்டி மலையில் வீற்றிருக்கும், சாமுண்டீஸ்வரி அம்மன் இனியாவது பிரதாப் சிம்ஹாவிற்கு, நல்ல புத்தி கொடுக்கட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை