உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்., வீரர் ஈட்டி வாங்க உதவிய நீரஜ் சோப்ரா: தற்போது வெளிவந்த நெகிழ்ச்சி கதை

பாக்., வீரர் ஈட்டி வாங்க உதவிய நீரஜ் சோப்ரா: தற்போது வெளிவந்த நெகிழ்ச்சி கதை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம், புதிய ஈட்டி வாங்க சிரமப்பட்டபோது, அவருக்கு உதவும்படி இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கோரியிருந்தார். அதில் கிடைத்த உதவிகளை வைத்து புதிய ஈட்டியை வாங்கி பங்கேற்ற பாக்., வீரர் தங்கம் வென்றார்.ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் கடந்த முறை தங்கப்பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா, இம்முறை 89.45 மீட்டர் தூரம் வீசி வெள்ளி வென்றார். பாகிஸ்தானை சேர்ந்த அர்ஷத் நதீம், 92.97 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி ஒலிம்பிக் சாதனை படைத்ததுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rzsk3sge&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நீரஜ் சோப்ராவின் வெற்றி குறித்து அவரது தாயார் சரோஜ் தேவி கூறியதாவது: நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எங்களுக்கு வெள்ளிப் பதக்கமும் தங்கத்துக்கு ஈடானதுதான். தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரரும் என் பிள்ளை தான். நீரஜ் காயமடைந்தார்; காயத்துடன் அவர் பெற்றுத்தந்த இந்த வெற்றியால் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.

நீரஜ் உதவி

தங்கம் வென்ற பாக்., வீரர் புதிய ஈட்டி வாங்கவே சிரமப்பட்டுள்ளதும், அவருக்கு இந்தியாவின் நீரஜ் சோப்ரா உதவியதும் தற்போது தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் புதிய ஈட்டியை வாங்க சிரமப்பட்டு, உதவி கோரி சமூக வலைதளத்தில் அர்ஷத் நதீம் பதிவிட்டுள்ளார். இதனையறிந்த நீரஜ் சோப்ரா, அவருக்கு உதவி செய்யும்படி பொதுமக்களிடம் கோரியிருந்தார். இதன்மூலம் கிடைத்த உதவிகளால் புதிய ஈட்டியை வாங்கிய அர்ஷத் நதீம், அதை வைத்து ஒலிம்பிக்கில் பங்கேற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

நீரஜ் உடன் புகைப்படம்

ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக இருவரும் பங்கேற்ற ஒரு போட்டியில், நீரஜ் தங்கமும், அர்ஷத் வெள்ளியும் வென்றிருந்தனர். அப்போது, நீரஜ் சோப்ரா இந்திய கொடியுடன் மைதானத்தில் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். அந்த சமயத்தில் நீரஜ் சோப்ராவின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வேகமாக ஓடிவந்து அரவணைத்தார் அர்ஷத். பின்னர் இந்திய கொடியுடன் நின்றிருந்த நீரஜ் உடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த வீடியோவும், புகைப்படமும் வைரலாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Ramesh Sargam
ஆக 09, 2024 20:44

அவன் பாகிஸ்தானி தங்கம் வென்றான். இவன் நம் வெள்ளி மகன் அவனுக்கு ஈட்டி வாங்கி உதவி செய்து நம் மனதில் தங்கமகனாக நிறைந்தான்.


gopal
ஆக 09, 2024 18:19

பாக்கிஸ்தான் வீரர் தங்கம் வென்றது மட்டும் அல்லாமல் ஒலிம்பிக் சாதனை படைத்துள்ளார். ஆனால் எப்பிடி கொண்டாடுவது என்று கூட தெரியாமல் ரெம்பவும் அமைதியாக இருந்தார். ஆச்சரியமான விஷயம்.


A S PRADEEP KUMAR
ஆக 09, 2024 17:06

பாகிஸ்தான் அரசியல்வாதிகள் தான் தன் நாட்டு மக்கள் மனதில் பிரிவினையை விதைப்பவர்கள்


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 09, 2024 15:32

நுணலும் தன் வாயால் தானே கெடும்


S.Martin Manoj
ஆக 09, 2024 14:19

இதுதான் இந்தியர்களின் உண்மை முகம் , ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் மதவெறி,ஜாதிவெறி என்ற விஷ விதையை இந்திய மக்களின் மனதில் தூவி பிரிவினை உண்டுபண்ணி சந்தோசம் கொள்ளும் ஈன பிறவிகளாக உள்ளனர்.


Anand
ஆக 09, 2024 14:58

உண்மை, நீங்கள் கூறும் மதவெறி, ஜாதிவெறி என்ற விஷ விதையை இந்திய மக்களின் மனதில் தூவி பிரிவினை உண்டுபண்ணி சந்தோசம் கொள்ளும் ஈன பிறவிகள் வேறு யாருமல்ல, புள்ளி ராஜாக்கள் தான்.


Ramesh Sargam
ஆக 09, 2024 13:59

இதுபோன்ற செய்திகளை அந்நாட்டினருக்கு முதலில் தெரியப்படுத்த வேண்டும். அவர்கள் எவ்வளவுதான் இந்தியாவுக்கு பயங்கரவாதிகளை ஊடுருவ விட்டு பாதகம் செய்தாலும், இந்தியா தன்னுடைய நிலையில் இருந்து மாறாது. ஆனால் ஒன்று சாது மிரண்டால் காடு கொள்ளாது. அதுபோல இந்தியாவும்.


RAMAKRISHNAN NATESAN
ஆக 09, 2024 13:53

எங்கள் தலையிலேயே மண்ணைப் போட்டுக் கொள்வதில் நாங்கள் சிறந்தவர்கள் ..........


S. Narayanan
ஆக 09, 2024 13:13

இந்திய மக்கள் சாதி மதம் பார்க்காமல் உலக மக்கள் அனைவரும் தங்கள் உடன் பிறந்த சகோதரர் மற்றும் சகோதரி போல பழகி இந்தியாவின் நல்லுணர்வை வெளி படுத்தி வருவதற்கு நீரஜ் சோப்ரா ஒரு எடுத்து காட்டு. ஆனால் இந்திய அரசியல் வாதிகள் மத உணர்வை தூண்டும் விதமாக செயல் பட்டு தங்கள் மட்டும் சமுதாயத்தில் உயர்ந்து வர நினைக்கும் .நிலை நம்மை வேதனை கொள்ள செய்கிறது.


Mario
ஆக 09, 2024 13:31

உண்மை


Kumar Kumzi
ஆக 09, 2024 14:02

கட்டுமரம் பப்பூ குடும்பங்கள் இந்த நாட்டின் சாபக்கேடு


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை