உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்., அரசின் எக்ஸ் தளப்பக்கம் இந்தியாவில் முடக்கம்

பாக்., அரசின் எக்ஸ் தளப்பக்கம் இந்தியாவில் முடக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாகிஸ்தான் அரசின் எக்ஸ் சமூக வலைதள பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தான் அரசின் எக்ஸ் சமூக வலைதள பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று எக்ஸ் தள நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது என பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4n6gefbz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலை தொடர்ந்து பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச எல்லைப்பகுதி, எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அமைந்துள்ள இடங்களில் கண்காணிப்பு முழு வீச்சில் மேற்கொள்ளப்படுகிறது.. கராச்சி கடலோரப் பகுதியில் இருந்து ஏவுகணை சோதனை நடத்த பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. இன்றும், நாளையும் நடைபெறும் சோதனை நடவடிக்கைகளை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை