உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லி குளிர்கால கூட்டத் தொடரில் லோக்பால் மசோதா: குர்ஷித் உறுதி

பார்லி குளிர்கால கூட்டத் தொடரில் லோக்பால் மசோதா: குர்ஷித் உறுதி

நாக்பூர்: ''பார்லிமென்டின் குளிர்காலக் கூட்டத்தொடரில், லோக்பால் மசோதாவை கொண்டு வருவது என்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதேநேரத்தில், ஹசாரேயின் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில், ஆர்.எஸ். எஸ்., அமைப்பினர் பங்கேற்றது தொடர்பாக, அவர் விளக்கம் அளிக்க வேண்டும்'' என, மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.நாக்பூரில், பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறியதாவது: ஜன் லோக்பால் மசோதா தொடர்பாக, அன்னா ஹசாரேயுடன் ஏற்பட்ட ஒப்பந்தப்படி, பார்லிமென்டின் குளிர்காலக் கூட்டத் தொடரில், லோக்பால் மசோதாவை அறிமுகப்படுத்துவது என்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதேநேரத்தில், ஹசாரேயின் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் பங்கேற்றதாக, அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளதால், அது பற்றி, ஹசாரே விளக்கம் அளிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமையை, மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற ஹசாரேயின் கோரிக்கை நடைமுறைக்கு ஒவ்வாதது.பொதுமக்களுக்கு உரிமை அளிப்பதற்காகவே, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனாலும், இந்தச் சட்டத்தின் சில அம்சங்கள் தொடர்பாக, கோர்ட்டுகள் ஆட்சேபனை எழுப்பியுள்ளன. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து, பல நீதிபதிகள் என்னிடம் புகார் தெரிவித்துள்ளனர். நாங்கள் கொண்டு வந்த சட்டம் எங்களையே தாக்கும் என்பது, அப்போது எங்களுக்குத் தெரியாது. சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று கூட, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர், தங்களின் தலைமையகத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதில்லை. அவர்களுக்கு, சோனியா தலைமையிலான தேசிய ஆலோசனை கவுன்சில் பற்றி பேச என்ன தார்மீக உரிமை இருக்கிறது.தேசிய ஆலோசனை கவுன்சில் உருவாக்கிய மத வன்முறை தடுப்புச் சட்டம், பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு வரும் போது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் விரும்பினால், அதை எம்.பி.,க்கள் மூலம் தோற்கடிக்கலாம். இவ்வாறு, குர்ஷித் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை