உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெறுப்பு குற்றம்!

வெறுப்பு குற்றம்!

திரிபுரா பழங்குடியின மாணவர் உத்தரகண்டில் கொல்லப்பட்டது கொடூரமான வெறுப்பு குற்றம். வெறுப்பு ஒரே இரவில் தோன்றுவதில்லை; நச்சுத் தன்மை வாய்ந்த கதைகள் மூலம் தினமு ம் அது இளைஞர்களுக்கு ஊட்டப்படுகிறது. ஆளும் பா.ஜ.,வின் வெறுப்பை கக்கும் தலைமையால் அது சர்வ சாதாரண செயலாக மாறி வருகிறது. ராகுல் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்.,அறிவுறுத்த வேண்டும்! தங்கள் எல்லைக்குள் மதக்கலவரங்கள் நிகழும் போது, அவற்றை தடுத்து நிறுத்த அந்தந்த மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்த வே ண்டும். மதச்சார்பற்ற நம் நாட்டில், வெவ்வேறு இனத்தவர் தங்களுக்கு விருப்பமான மதத்தை பின்பற்ற நம் அரசியல்அமைப்பு சட்டம் உரிமை வழங்கியுள்ளது. பரூக் அப்துல்லா தலைவர், தேசிய மாநாட்டு கட்சிபணிச்சுமையால் பலி! பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தால் இதுவரை, பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஈடுபட்டிருந்த 33 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் உயிரிழந்துள்ளனர். ஒரு ஊடுருவல்காரர் நம் நாட்டில் தங்குவதற்கு கவலை தெரிவிக்கும் மத்திய அரசு, 33 பேர் இறந்ததை சரி என்கிறதா? கபில் சிபல் ராஜ்யசபா எம்.பி., சுயேச்சை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

கண்ணன்
டிச 30, 2025 05:13

அக்பர் சிபல் உண்மையான வக்கீல்தானா?!


Venugopal, S
டிச 30, 2025 00:51

பஹல்காம் தாக்குதல் நடத்திய பரூக் அப்துல்லா வெறுப்பை பற்றி பேசுகிறார். சாத்தான் வேதம் ஓதுவது மிகவும் கொழுப்பு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை