உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹசாரே உடல்நிலை: டாக்டர்கள் குழு கண்காணிப்பு

ஹசாரே உடல்நிலை: டாக்டர்கள் குழு கண்காணிப்பு

புதுடில்லி: உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அன்னா ஹசாரேயின் உடல்நிலையை, இதயநோய் நிபுணர் நரேஷ் டிரெஹன் தலைமையிலான, 36 டாக்டர்கள் அடங்கிய குழுவினர் கண்காணிக்க உள்ளனர். திகார் சிறையிலிருந்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட ஹசாரே, ராம்லீலா மைதானத்தை அடைந்ததும், அங்கு கூடியிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். பின்னர் அவருக்கு, ரத்த அழுத்தம் உட்பட பல்வேறு பரிசோதனைகளை டாக்டர்கள் குழுவினர் மேற்கொண்டனர். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக, குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜரிவால் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ''ஹசாரே உடல்நிலையை கண்காணிக்க 36 டாக்டர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். உண்ணாவிரதம் இருக்கும் மேடை அருகே, மருத்துவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது'' என்றார். திகார் சிறையில் கடந்த 16ம் தேதி உண்ணாவிரதத்தை துவக்கிய ஹசாரே, தற்போது 3 கிலோ எடையை குறைத்துவிட்டதாக தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி