உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகாவில் 3 நாட்கள் கன மழை எச்சரிக்கை..

கர்நாடகாவில் 3 நாட்கள் கன மழை எச்சரிக்கை..

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: 'வங்கக்கடலில் உருவான, 'பெஞ்சல்' புயல் காரணமாக, கர்நாடகாவில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கன மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.கர்நாடக மாநில வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:தெற்கு வங்கக்கடலில் கடந்த 25ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வளி மண்டல அடுக்குகளில் ஏற்பட்ட காற்று முறிவு காரணமாக, புயலாக வலுவடைவதில் தாமதம் ஏற்பட்டது. காற்று முறிவு பாதிப்புகள் நேற்று முன்தினம் காலை முதல் சீரடைய துவங்கின.இதையடுத்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் 'பெஞ்சல்' புயல் உருவாகி உள்ளது. எனவே, மாநிலத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கோலார், சிக்கபல்லாபூர், பெங்களூரு ரூரல், ராம்நகரில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.தெற்கு உள் மாவட்டங்களான துமகூரு, சாம்ராஜ்நகர் உட்பட மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும். அதேவேளையில், கடலோர மாவட்டங்கள், வடக்கு உள் மாவட்டங்களில் வறண்ட காற்று வீசும்.வடக்கு உள் மாவட்டங்களில் வழக்கத்தை விட, 2 அல்லது 3 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் குறையும். ஆனால் பெங்களூரில் பெரும்பாலும் மேகமூட்டமாக காணப்படும். பெங்களூரில் அதிகபட்சமாக 25 டிகிரி செல்ஷியசும், குறைந்தபட்சம் 18 டிகிரி செல்ஷியசும் வெப்பம் பதிவாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Gopinathan K
டிச 02, 2024 17:02

Water problem is never ending in Bangalore, doesn't mater if its sunny or rainy


Ramesh Sargam
டிச 01, 2024 13:01

எவ்வளவு கண மழை பெய்தாலும், பெங்களூரில் ஒரு சில இடங்களில் மக்கள் காவிரி நீர் பல வாரங்களாக வராமல், குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் மிக மிக அவதிப்படுகின்றனர். நான் வசிக்கும் ராமமூர்த்தி நகரில் கடந்த சில வாரங்களாகவே காவிரி நீர் வருவதில்லை. நீர் வாரிய அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. அரசு தூங்குகிறது. மக்கள் மிக மிக அவதிப்படுகிறார்கள். முதல்வர் சித்தராமையா அந்த முடா வழக்கில் சிக்கி, மக்கள் நலனில் அக்கறை எடுப்பதே இல்லை. துணை முதல்வர், சிவகுமார், இப்பொழுதைய முதல்வர் சிதது எப்பொழுது சிறை எழுவார், அடுத்த முதல்வர் பதவி எப்பொழுது தனக்கு கிடைக்கும் என்கிற கனவில் இருக்கிறார்.


Gopinathan K
டிச 02, 2024 16:59

எஸ் ட்ரு ??


நிக்கோல்தாம்சன்
டிச 01, 2024 08:25

தமிழ்நாடு கருநாடக எல்லையோரம் என்று நண்பர் கூறியுள்ளார் , அவரின் கணிப்பு படியே ஆரோவில் இந்த பயணம் தொடங்கும் என்றார் அப்படியே ஆனது காசர்கோடு பையனுர் முடியும் என்று கூறியுள்ளார் பாப்போம்


நிக்கோல்தாம்சன்
டிச 04, 2024 03:40

அந்த விவசாய நண்பர் சஞ்சீவிக்கு ஒரு வாழ்த்து சொல்லுங்க தினமலர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை