உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி எல்லைகளில் பலத்த பாதுகாப்பு விவசாயிகள் நுழைவதை தடுக்க அதிரடி

டில்லி எல்லைகளில் பலத்த பாதுகாப்பு விவசாயிகள் நுழைவதை தடுக்க அதிரடி

புதுடில்லி,டில்லியில் முற்றுகை பேரணிக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதன் எல்லைகளான சிங்கு, டிக்ரி, காஜிபூர் ஆகிய பகுதிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர்.உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள விவசாய சங்கங்கள், வேளாண் பொருட்களுக்கு, எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைநகர் டில்லியை நோக்கி பேரணியாக அணிவகுத்து செல்ல இன்று அழைப்பு விடுத்துள்ளன. இந்த பேரணியில் பங்கேற்க, உ.பி., - பஞ்சாப், ஹரியானா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, லாரி மற்றும் டிராக்டர்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டில்லிக்கு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2020ம் ஆண்டு வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடிய போது, டில்லியின் எல்லைகளான சிங்கு, டிக்ரி, காஜிபூர் ஆகிய பகுதிகளில் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் ஓராண்டுக்கு மேல் நீடித்ததால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.இது போன்ற நிலைமை தற்போது ஏற்படாமலிருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டில்லியின் சிங்கு, டிக்ரி, காஜிபூர் ஆகிய எல்லை பகுதிகளில், பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர். அதன்படி, டில்லியின் எல்லைகளில் இரும்பு வேலிகள், பெரிய கான்கிரீட் கலவைகளால் ஆன தடுப்புகள், சாலை தடுப்புகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், எல்லைகளில் நடமாட்டத்தை, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானம் வாயிலாக, 24 மணி நேரமும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். இது தவிர, டில்லியின் முக்கிய பகுதிகளிலும், எல்லைகளிலும், போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாப் மற்றும் ஹரியானா எல்லைகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டில்லியின் எல்லை பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதற்கிடையே மத்திய அமைச்சர்கள் பியுஷ் கோயல், அர்ஜுன் முண்டா, நித்யானந்த ராய் ஆகியோர், சண்டிகரில் நேற்று விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்தினர்.

144 தடை உத்தரவு

டில்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுஉள்ளதாவது:விவசாயிகள் போராட்டத்தை கருத்தில் வைத்து, டில்லி முழுதும் வரும் மார்ச் 12ம் தேதி வரை, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் பேரணி, ஊர்வலம், சாலை மறியல், பொதுக்கூட்டம் போன்றவை நடத்த தடை விதிக்கப்படுகிறது. மேலும், டில்லியில் லாரிகள், டிராக்டர்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. தடையை மீறுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

K.n. Dhasarathan
பிப் 13, 2024 10:59

விவசாயிகளின் நண்பன் மோடி வாழ்க குறைந்த பட்ச ஆதரவு விலை விவசாயிகள் கேட்டதும் ஒப்புக்கொண்ட பிரதமர் வாழ்க இரண்டு ஆண்டுகளாக முந்தைய விவசாயிகளின் போராட்டத்தை கண்டு கொள்ளாத மோடி வாழ்க இப்போது தற்காலிக சிறைகளை விவசாயிகளுக்கு ஏற்பாடு செய்யும் மோடி வாழ்க


ஆராவமுதன்,சின்னசேலம்
பிப் 13, 2024 12:17

பரவால்ல கொடுத்த காசுக்கு மேல கூவுறான்யா இந்த அறிவாலய கொத்தடிமை.????


Pandianpillai Pandi
பிப் 13, 2024 08:49

பேரணி செல்ல தடை.. ஆனால் பாத யாத்திரை என்ற பெயரில் கும்மாளமிடும் தமிழ்நாட்டு பிஜேபிக்கு தடை விதித்தால் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி என்று பெயர் மாற்றி உள்ளே கூட்டத்தை கூட்டி மக்களுக்கு இடையூரு செய்வீர்கள். விவசாயிகள் மக்கள் சந்திப்பு என்று மாற்றி அங்கு கூட்டம் போட காவல் துறை அனுமதிக்குமா?


தெய்வநாயகம்,சக்கந்தி சிவகங்கை
பிப் 13, 2024 11:09

திமுக ஊபிஸ்கள் இப்போது வரிசை கட்டி ஒப்பாரி வைக்க வந்துருவானுக, இந்த முதல் அறிவாலய உபி வந்துருச்சு...


Devan
பிப் 13, 2024 12:44

பேரணிக்கு தடை ஆமாம் விவசாயி என்ற பெயரில் வரும் கொள்ளைக்காரர்கள். அதனால் தடை. தமிழகத்தில் மக்கள் விரும்பும் பாதயாத்திரை அதனால் அரசு அதற்கு தடை விதிக்கிறது. புரியாத 200 ரூபாய் உபிஸ் இப்படி தான் கதனும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை