உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விசாரணைக்கு உச்சநீதிமன்றம் "நோ": ஜாமின் கோரிய மனுவை திரும்ப பெற்றார் சோரன்

விசாரணைக்கு உச்சநீதிமன்றம் "நோ": ஜாமின் கோரிய மனுவை திரும்ப பெற்றார் சோரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் இடைக்கால ஜாமின் கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் மறுத்ததை அடுத்து, அவர் ஜாமின் மனுவை திரும்பப் பெற்றார்.ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், ஜன., 31ல் கைது செய்யப்பட்டார். நிலமோசடி தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதை அடுத்து, முதல்வர் பதவியில் இருந்து அவர் விலகினார்.அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை, ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம், கடந்த சில தினங்களுக்கு முன் நிராகரித்தது. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஹேமந்த் சோரன் இடைக்கால ஜாமின் கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் மறுத்ததை அடுத்து ஜாமின் மனுவை ஹேமந்த் சோரன் திரும்பப் பெற்றார். தேர்தல் பிரசாரம் செய்ய, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது போல், சோரனுக்கும் ஜாமின் கிடைக்கும் என அவரது தரப்பினர் எதிர்பார்த்து காத்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

N Sasikumar Yadhav
மே 22, 2024 18:46

கெஜ்ரிவாலுக்கு ஒரு நியாயம் இவருக்கு அநியாயம் இழைக்கிறது கெஜ்ரிவாலுக்கும் இதுபோல் சொல்லியிருக்க வேண்டும்


M Ramachandran
மே 22, 2024 17:55

ஜாமீன் கொடுத்து முன் உதாரணத்தைய்ய நீதி மன்றம் யேற்படுத்தி விட்டது தங்களுக்கும் ஜாமீன் கிடைக்கும் மென்று அதில் தவறு இருப்பதாக தெரிய வில்லையை பெரிய திருட்டு என்று பேத மில்லை


jss
மே 22, 2024 16:13

சொந்த விருப்பத்தின் அடிப்படையில் கடல்மீன I mean ஜாமீன் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு பொது ஜனத்திற்க்கு அரசியல்வாதிக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை தெரியும்.


Bala Paddy
மே 22, 2024 15:47

கெஜ்ரி கு கொடுத்ததை என் சோரனுக்கு தரவில்லை? ஹ்ம்ம்ம் Judicial Reforms தேவை


Srinivasan Krishnamoorthi
மே 22, 2024 14:12

ஹேமந்த் சோரன் மானமுள்ள அரசியல்வாதி கைதானவுடன் பதவியை ராஜினாமா செய்கிறார் உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுத்தவுடன் மனுவை திரும்ப பெறுகிறார் இவர் கெஜ்ரிவால் போல இல்லை


Jayaraman Sekar
மே 22, 2024 14:05

நீங்க சோரன் கேஜ்ரிவால் இல்லை அது ஞாபகம் இருந்தா மனுவே போட்டு இருக்க மாட்டிங்க


ஆரூர் ரங்
மே 22, 2024 14:03

இவங்க அப்பாவும் JMM கட்சி எம்பியாக இருந்தவர்களும் பார்லிமென்ட்டில் காங் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பணம் வாங்கினோம் என்று கோர்ட்டில் ஒப்புக்கொண்டவர்கள். அதற்கு வருமான வரிவிலக்கும் கேட்டவர்கள். குட்டி பதினாறு அடி பாய்கிறது.


GMM
மே 22, 2024 14:01

கெஜ்ரிவால் இந்திய எதிர் தேச செல்வாக்கு மிக்க நபர் படித்தவர் முதல்வராக நடிப்பவர் குறைந்த செல்வாக்கில் தேசிய கட்சி அந்தஸ்து ஏராளமான ஊழல் நிலுவை அவருக்கு இடை கால ஜாமீன் தேசிய அளவில் திமுக? சோரன் திமுக பொன்முடி, ஆம் ஆத்மி கெஜ்ரிவாலுக்கு இணையாக சட்டத்தை பயன்படுத்தி மனு தாக்கல் செய்ய முடியாது?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை