உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  அனில் அம்பானிக்கு எதிராக நடவடிக்கை; வங்கிகளுக்கு உயர் நீதிமன்றம் தடை

 அனில் அம்பானிக்கு எதிராக நடவடிக்கை; வங்கிகளுக்கு உயர் நீதிமன்றம் தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் அவரின் 'ரிலையன்ஸ்' நிறுவனத்தின் கணக்குகளை மோசடி என அறிவிக்கக் கோரிய மூன்று வங்கிகளின் நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்தி வைக்க மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, 66. இவர், தன் 'ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்' நிறுவனத்தின் பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உட்பட பல்வேறு வங்கிகளில் கடன்பெற்றிருந்தார். இதில், நிதி முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனத்தின் வங்கி கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன. இதன் முடிவில், அந்த கணக்குகள் மோசடியானவை என அறிவிக்க இந்தியன் ஓவர்சீஸ், ஐ.டி.பி.ஐ., மற்றும் பாங்க் ஆப் பரோடா வங்கிகள் முடிவு செய்தன. இது குறித்து விளக்கமளிக்க கோரி, அனில் அம்பானிக்கு மூன்று வங்கிகள் சார்பில் 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் அனில் அம்பானி மனுத் தாக்கல் செய்தார். உரிய முறையில் கணக்கு தணிக்கை நடக்கவில்லை என, அனில் அம்பானி தரப்பில் கூறப்பட்டது. இந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அனில் அம்பானி மற்றும் அவரின் நிறுவனத்தின் கணக்குகள் தாமதமாக தணிக்கை செய்யப்பட்டதை உயர் நீதிமன்றம் கண்டித்தது. மேலும், அனில் அம்பானி மற்றும் அவரின் நிறுவன கணக்குகளை மோசடியானவை என்று அறிவிக்க கோரும் மூன்று வங்கிகளின் நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

naranan
டிச 26, 2025 03:21

உடனே வந்திடுவாங்களே பணக்காரனைக் காப்பாற்ற? இதே அக்கறை நீதிமன்றங்களுக்கு ஏழைகள் மீதும் வருமா?


R.RAMACHANDRAN
டிச 25, 2025 09:22

இந்த நாட்டில் அனைத்து அதிகார அமைப்புகளும் நீதி மன்றங்கள் உட்பட குற்றவாளிகளை காப்பாற்றுவதிலும் நிரபராதிகளை கொடுமை படுத்துவதிலும் உறுதியாக உள்ளன.சாமான்ய மக்களுக்கு அவர்களால் கோடி கணக்கில் செலவு செய்ய முடியாததால் நீதி மறுக்கப் படுகிறது.சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமம் என்பதும் மற்றும் இதர அடிப்படை உரிமைகளும் ஏழைகளை பொறுத்த அளவில் மீறப் படுகின்றன. இது காலனி ஆதிக்கத்தை விட கொடுமையானதாகும் என்பதை யாரும் இந்த நாட்டின் பிரதமர் உட்பட உணர்த்துவதாக இல்லை.


spr
டிச 25, 2025 08:06

"பிடிஓ எல்எல்பி"என்ற ஆலோசனை நிறுவனம் தயாரித்த கணக்குத் தணிக்கை அறிக்கையின் அடிப்படையில், மனுதாரா் அனில் அம்பானி மற்றும் அவரின் நிறுவன வங்கிக் கணக்குகளை மோசடி கணக்குகளாக அறிவிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாகப் பார்க்கும்போது இந்த முடிவுக்கு பிடிஓ எல்எல்பியின் அறிக்கை போதுமான ஆதாரமாக இருந்து வலுசோ்க்கவில்லை. அதேவேளையில் ரிசா்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி, முறையாகத் தோ்ச்சி பெற்ற பட்டையக் கணக்காளா் ஒருவா் அந்த அறிக்கையில் கையொப்பமிட வேண்டும். ஆனால் அந்த அறிக்கையில் பட்டையக் கணக்காளா் எவரும் கையொப்பமிடவில்லை. எனவே அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, தண்டிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க முடியாது - என்பதுதான் சட்டப்படி நீதிமன்றம் எடுத்த முடிவு வங்கிகளை ஏமாற்றும் குற்றவாளிகள் தப்பிக்க வங்கிகள் வழி செய்து தருகின்றன. இவை அரசு வங்கிகள். ஒரு தரமான தணிக்கை நிறுவனம் கிடைக்கவில்லையா? இந்த வங்கி அதிகாரிகளுக்கு இந்த சின்ன விஷயம் கூடவா தெரியாது? எங்கோ தவறு நடக்கிறது வங்கி அதிகாரிகள் முறையாக விசாரிக்கப்பட வேண்டுமென நீதிமன்றம் கூறியிருக்க வேண்டும் அவர்களே முதலில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்


தியாகு
டிச 25, 2025 07:18

டுமிழர்களை பொறுத்த வரையில் அம்பானி, அதானி இவர்களெல்லாம் மோசமான கார்பொரேட் முதலாளிகள். ஆனால் டுமிழகத்தின் முதல் பணக்காரர் மற்றும் இந்திய அளவில் எழுபதாவது பணக்காரர் மற்றும் இருபத்தைந்தாயிரம் கோடிகள் சொத்து வைத்திருக்கும் கட்டுமர திருட்டு திமுகவின் பன் தொலைக்காட்சியின் முதலாளி கேடி பிரதர்ஸ் கலாநிதி மாறன் பெட்டி கடை வைத்து பொறி உருண்டை வியாபாரம் செய்து படி படியாக முன்னேறிய மிக நல்ல கார்பொரேட் முதலாளி, சாரி பெட்டி கடை ஓனர். விளங்கிடும் டுமிழ்நாட்டின் எதிர்காலம்.


vaiko
டிச 25, 2025 05:13

அம்பானி, அதானி நாட்டிற்கே முதலாளிகள்.


தியாகு
டிச 25, 2025 07:52

கட்டுமர திருட்டு திமுக மாதிரி மக்கள் வரிப்பணம் முப்பதாயிரம் கோடிகளை ஊழல்கள் லஞ்சங்கள் மூலம் ஆட்டையை போடவில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை