உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிக வரி: காங்., புகார்

நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிக வரி: காங்., புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கார்ப்பரேட்களை விட நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிக வரி விதிக்கப்படுவதாகவும், இதனால், நிறுவனங்களை விட தனி நபர்கள் அதிக வரி செலுத்துவதாகவும், காங்., பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறயுள்ளதாவது: ஜூலை1ம் தேதி வரை, 3.61 லட்சம் கோடி ரூபாய் வருமான வரி வசூல் ஆனது. ஆனால், கார்ப்பரேட் வரி 2.65 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே வசூல் ஆகி உள்ளது. இது நிறுவனங்களை விட தனி நபர்கள் அதிக வரி செலுத்துவது எடுத்துக்காட்டுகிறது.மன்மோகன் சிங் பதவி விலகும் போது, மொத்த வரி வசூலில் தனி நபர்கள் செலுத்தும் வருமான வரி 21 சதவீதமாகவும், கார்ப்பரேட் வரி 35 சதவீதமாகவும் இருந்தது. ஆனால், கார்ப்பரேட் வரி இன்று 26 சதவீதமாக சரிந்துள்ளது. ஆனால் தனி நபர்கள் செலுத்தும் வருமான வரி 28 சதவீதமாக அதிகரித்து உள்ளது.2019 ல் தனியார் முதலீடு அதிகரிக்கும் எனக்கூறி கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. மாறாக மன்மோகன் ஆட்சியில் 35 சதவீதமாக இருந்த தனியார் முதலீடு, 2014-24 ல் 29 சதவீதமாக குறைந்து விட்டது. அதிக வரியை தனி நபர்கள் ஏற்றுக் கொண்ட நிலையில், கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்டுள்ளது. இதன், மூலம் ரூ.2 லட்சம் கோடி கோடீஸ்வரர்களின் பைகளுக்கு சென்றுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Suresh R
ஜூலை 14, 2024 23:06

Please ignore these statements. Negative thinker


Suresh R
ஜூலை 14, 2024 23:04

Please ignore this guy He is a waste


ஆரூர் ரங்
ஜூலை 14, 2024 20:57

கார்பரேட் வரி விதிப்பு சதவீதம் சுற்றியுள்ள நாடுகளை விட அதிகமாக இருந்ததால் அந்நிய நிறுவனங்கள் முதலீடு செய்யத் தயக்கம் காட்டின. முதலீடுகள் வந்ததால்தான் வேலைவாய்ப்பும், சம்பள உயர்வும் அதனால் தனிநபர் வருமானவரி வசூலும் அதிகரித்தன.


selvelraj
ஜூலை 14, 2024 20:47

என்னது மன்மோகன் சிங் ஆட்சி செய்தாரா? சோனியா குடும்பம் பென்சிலில் கோப்பில் எழுதியதை தவறாமல் செய்தார். சற்று கூட வெட்கம் என்பது இல்லையா? மாதம் 8500 ரூபாய் மகளிர் உதவித்தொகை என்ன ஆயிற்று? இந்த அழகுல நடுத்தர வர்க்கத்துக்கு கொடி புடிக்க வந்துவிட்டார் இந்த மேதாவி


Nagarajan S
ஜூலை 14, 2024 20:39

இப்போது வரி வசூல் அதிகமாகி இருக்கிறது எதனால் ? கார்ப்பரேட் வரி அதிகம் இருந்தபோது தொழில்கள் முடங்கின. அது குறைக்கப்பட்டபின் தொழில்கள் முன்னேற ஆரம்பித்து விட்டன. மேலும் விற்பனை வரி கட்டாமல் ஏமாற்றிக் கொண்டிருந்த நிறுவனங்களும் வரி கட்ட வேண்டிய நிர்பந்தம் ஆனதால் GST வருமானம் மேலும் கூடிக்கொண்டே போகிறது. அது போலவே, தனி நபர் பெரும்பாலோர் வருமான வரி கட்டாமல் ஏமாற்றி வந்த நிலை மாறி இப்போது வருமான வரி தாக்கல் செய்ய வேண்டி வந்துள்ளது. காரணம் ஆதார் பான் இணைப்பு. மற்றும் ஃபோன் வங்கி கணக்கு, பான் ஆதார் இணைப்பு அதனால் தான். பெரிய கொலம்பஸ் போல இவர் தவறை கண்டு பிடித்து விட்டாரோ?


Malarvizhi
ஜூலை 14, 2024 20:19

மாத சம்பளம் பெரும் தனி நபரின் வருமான வரி அதிகரித்து உள்ளது. முன்பு ஒரு மாத சம்பளத்தை வருமான வரியாக வாங்கினார்கள். இப்போது இரண்டு மாத சம்பளத்தை வருமான வரியாக வாங்குகிறார்கள். அட்வான்ஸ் tax கட்டவில்லையென்றால் வட்டி வசூலிக்கிறார்கள்.


Muthu
ஜூலை 14, 2024 20:08

கார்பொரேட் வரி செலுத்த கடைசி நாள் இன்னும் மூன்று மாதங்கள் இருக்கிறது. கடைசி தேதி 31-10-2024.தனி நபர் வரி செலுத்த கடைசி தேதி ஜூலை 31 நவம்பர் மாதத்தில் ஒப்பீடு செய்யுங்கள் எகனாமிஸ்ட்


Chandrasekaran Sriram
ஜூலை 14, 2024 20:01

ஆரம்பித்ததே இந்த முட்டாளின் இத்து போன கட்சி தான் . முழு பூசணியை சோற்றில் மறைக்க முயற்சிக்கும் அராஜகன்


Nandakumar Naidu.
ஜூலை 14, 2024 20:00

ரொம்ப யோக்யர்கள் மாதிரி பேசுறார் பாரு.


Ravichandran S
ஜூலை 14, 2024 19:32

இது மாதிரியானவர்களை அரசியல்வாதிகளிடம் அதிகபட்சமாக புடுங்கலாம்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி