உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹிந்தி நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

ஹிந்தி நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

மும்பை: நடிகர் சல்மான் கானை கொல்லப்போவதாக மீண்டும் மிரட்டல் விடப்பட்ட நிலையில், அதை அனுப்பிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.பிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கான், 59. கடந்த 1998ல், ராஜஸ்தானில் படப்பிடிப்புக்கு சென்ற போது, அங்கு வனப்பகுதியில் இருந்த, 'பிளாக்பக்' எனப்படும் அரிய வகை மான்களை வேட்டையாடினார்.இது தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் சல்மான் கான் ஜாமின் பெற்றார். பிஷ்னோய் சமூக மக்களின் குருவான 16வது நுாற்றாண்டில் வாழ்ந்த ஜம்புகேஸ்வரரின் மறுவடிவமாக பிளாக்பக் மான்கள் கருதப்படுகின்றன. அந்த வகை மான்களை கொன்றதால், பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்த பிரபல தாதாவான லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல், சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறது.மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பாந்த்ராவில் சல்மான் கான் வசிக்கும், 'கேலக்சி அபார்ட்மென்ட்ஸ்' வாசலுக்கு, கடந்த ஆண்டு ஏப்., 14ம் தேதி அதிகாலை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரது வீட்டை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தப்பினர்.இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.இதற்கு, லாரன்சின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் பொறுப்பேற்றார். துப்பாக்கிச் சூடு நடத்திய இரு நபர்களும் கைது செய்யப்பட்டனர்.இருப்பினும், அடுத்தடுத்து சல்மானை கொல்லப் போவதாக மும்பை போக்குவரத்து போலீசாருக்கு மிரட்டல் வருவது தொடர் கதையாக உள்ளது. இந்நிலையில், மும்பை போக்குவரத்து போலீசாரின் வாட்ஸாப் எண்ணிற்கு, சல்மான் கானை கொல்லப்போவதாக மர்ம நபர் ஒருவர் நேற்று முன்தினம் மிரட்டல் விடுத்துள்ளார்.அதில், 'சல்மான் கானின் வீட்டில் குண்டு வைத்து அவரை கொல்வோம். அவரின் காரும் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும்' என குறிப்பிடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.இதுகுறித்து அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை போலீசார் தேடி வருகின்றனர்.கடந்தாண்டு ஏப்., 14ல், அவர் வீட்டின் முன் துப்பாக்கிச் சூடு நடந்த நிலையில், மீண்டும் அதை ஒட்டிய தேதியில் மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ