உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் 7 குழந்தைகள் உயிரிழந்த மருத்துவமனையின் உரிமையாளர் கைது

டில்லியில் 7 குழந்தைகள் உயிரிழந்த மருத்துவமனையின் உரிமையாளர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி விவேக் விஹார் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 6 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அதன் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.டில்லி விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் நேற்று இரவு தீவிபத்து ஏற்பட்டது. அதில் 7 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 5 குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவிலும், ஒரு குழந்தை வென்டிலேட்டர் உதவியுடனும் சிகிச்சை பெற்று வருகிறது. 16 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதும்,அங்கிருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வெடித்து சிதறின.இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், அந்த மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் நவீன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் டில்லியில் பல இடங்களில் மருத்துவமனை நடத்தி வருவதாக போலீசார் கூறியுள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

rsudarsan lic
மே 26, 2024 19:10

இந்த செய்தி படிக்கும் நேரத்திலே அவனுக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டிருக்கும் வாழ்க தலைநகரம் தலை எவ்வழி நாடு அவ்வழி

Shunmugham Selavali
மே 26, 2024 18:50

தானியங்கி தீயணைப்பு கருவிகள்- தீ உண்டான உடன், அபாய ஒலி ஏற்ப்படுத்துவது, தண்ணீரை தெளித்து தீயை அணைப்பது, வெப்பத்தை குறைப்பது, மேலும் பல பாதுகாப்பு அமைப்புகள் மருத்துவ மணைகளுக்கு அவசியம் இருக்க வேண்டும். இங்கு அவை இருந்ததா?, சரிவர பாரமரிக்கப்படனவா?, பயிற்ச்சி பெற்றவர்கள் பணியில் இருந்தார்களா? நாடு முழுவதும் அணைத்து மருத்துவ மணைகளிளும் ஆய்வு செய்து நடைமுறை படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை