உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

புதுடில்லி: இன்று (பிப்.,1) தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அதிகபட்சமாக பாதுகாப்புத்துறைக்கு ரூ.6.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் தாக்கல் செய்தார். அதில், மொத்தம் 9 துறைகளுக்கு தனித்தனியாக திட்டங்களை குறிப்பிட்டு, அதற்கான நிதிகளையும் ஒதுக்குவதாக அறிவித்தார். அதன்படி, அதிகபட்சமாக பாதுகாப்புத்துறைக்கு ரூ.6.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

துறை வாரியாக நிதி ஒதுக்கீடு

* பாதுகாப்புத்துறைக்கு ரூ.6.2 லட்சம் கோடி* சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.2.78 லட்சம் கோடி* ரயில்வேத்துறைக்கு ரூ.2.55 லட்சம் கோடி, நுகர்வோர் விவகாரங்கள்* உணவு மற்றும் பொது விநியோகத்துறைக்கு ரூ.2.13 லட்சம் கோடி* உள்துறைக்கு ரூ.2.03 லட்சம் கோடி* ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.1.77 லட்சம் கோடி* ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறைக்கு ரூ.1.68 லட்சம் கோடி* தகவல் தொடர்புத்துறைக்கு ரூ.1.37 லட்சம் கோடி* விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறைக்கு ரூ.1.27 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sakthi Parthasarathy
பிப் 01, 2024 19:32

விவசாயம், பொது விநியோகம் நிதியை பெற்று இருக்க வேண்டும். விவசாயம் செழித்து விலைவாசி குறையுமானால் பொது விநியோகம் தேவை குறையுமே


ராஜா
பிப் 02, 2024 05:17

விவசாயம் செழித்து தான் இருக்கிறது. இங்கே பதுக்கல் அதிகம் உள்ளதால் விலைவாசி குறையவில்லை. ஓன்றறை வருடம் தலைநகரில் நல்ல சட்டங்களை எதிர்த்து தீவிரவாதிகளை விட்டு போராடினால் எந்த நன்மையும் நடக்காது.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை