உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விபத்து பகுதியாக மாறி வரும் ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலை

விபத்து பகுதியாக மாறி வரும் ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலை

தேவனஹள்ளி: பெங்களூரு - ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில், தேவனஹள்ளி பகுதியில் சர்வீஸ் ரோடு, போக்குவரத்து பலகைகள் இல்லாததால் விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.இந்த சாலை, தேவனஹள்ளியில் உள்ள வெங்கடகிரிகோட், புல்லஹள்ளி, ஹோசூட்யா, இரிகேனஹள்ளி ஆகிய கிராமங்களின் வழியாக செல்கிறது. இந்த கிராம மக்கள், சாலையை கடப்பதற்கு சரியான வசிதகள் இல்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் நேர்கின்றன. நெடுஞ்சாலையை கடக்கும்போது, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் உட்பட பலரும் உயிர் பயத்துடனே கடந்து செல்கின்றனர். இது பற்றி கிராம மக்கள், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் பல முறை கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என அப்பகுதியினர் கூறுகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த விபத்துகளில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். வெங்கடகிரிகோட், புல்லஹள்ளிக்கு இடைபட்ட நெடுஞ்சாலையில் நடப்பாண்டில் மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளனர்; 28 பேர் காயமடைந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் ரோடு இல்லை, சரியான போக்குவரத்துப் பலகைகளும் வைக்கப்படவில்லை என புகார் அளித்துள்ளனர்.19.11.2024/A.hariharan19-hari-001அச்சத்துடன் சாலையை கடக்கும் பாதசாரிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை