உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., ஆட்சிக்கு வந்தால் மரணத்திற்கு பிறகும் வரி: பிரதமர் மோடி எச்சரிக்கை

காங்., ஆட்சிக்கு வந்தால் மரணத்திற்கு பிறகும் வரி: பிரதமர் மோடி எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராய்ப்பூர்: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டு மக்களிடம் மரணம் அடைந்த பிறகும் வரி வசூலிக்க காங்., திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா பகுதியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: காங்கிரசின் மோசமான ஆட்சியும், அலட்சியமும்தான் நாட்டின் அழிவுக்குக் காரணம். இன்றைக்கு பயங்கரவாதம் மற்றும் நக்சலிசத்துக்கு எதிராக பா.ஜ., கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. வன்முறையைப் பரப்பும் மக்களைத் துணிச்சலானவர்கள் என்று சொல்லி காங்கிரஸ் ஆதரிக்கிறது. பயங்கரவாதிகள் கொல்லப்படும்போது கண்ணீர் சிந்துகிறது, இது போன்ற செயல்களால், நாட்டின் நம்பிக்கையை காங்கிரஸ் இழந்துவிட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nt9s6vdb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆந்திராவில் மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க பல ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரஸ் முயற்சி செய்தது. பின்னர் நாடு முழுவதும் அமல்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து ஏற்படும். நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு கொடுப்பார்கள். பா.ஜ., கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதரீதியிலான இடஒதுக்கீட்டை அனுமதிக்காது.

காங்கிரசின் திட்டம்

நாட்டு மக்களிடம் மரணம் அடைந்த பிறகும் வரி வசூலிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. நாட்டு மக்களின் சொத்துகளை பறிப்பதற்காக காங்கிரஸ் கட்சி திட்டம் தீட்டியுள்ளது. நாட்டில் உள்ள ஏழை மக்களின் சொத்துகள், உடைமைகள் மீது அக்கட்சி கண் வைத்துள்ளது. மக்கள் உழைத்து சேர்த்த சொத்து, பணத்தை பறிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

Nithy J.R
ஏப் 28, 2024 14:30

நல்ல பதிவு


Sundaram K
ஏப் 26, 2024 18:14

ஆமாம் ஆமாம் இறந்தவர்களின் பெயரில் ஒரே தொலைபேசி எண் கொண்ட ஆயிரக்கணக்கானவர் இன்சூரன்ஸ் வாங்கியதாக தொலைக்காட்சி செய்தி கேட்டேன்


Bahurudeen Ali Ahamed
ஏப் 25, 2024 21:01

காங்கிரஸ் கட்சி கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு மேல் ஆண்டது, ஆனால் உங்களைப்போல் வரி விதித்து மக்களை கொடுமைப்படுத்தவில்லை இப்பொழுது வந்து காங்கிரஸ் ஆட்சியமைத்தால் இறப்பிற்கும் வரி போட்டு கொன்று விடுவார்கள் என்று பயமுறுத்தப்பார்க்கிறீர்கள் என்ன ஒரு நாடகம்


Pandi Muni
ஏப் 26, 2024 08:52

இந்தியாவை கொள்ளையடிக்க வந்த கூட்டத்திடம் இந்துக்களின் சொத்தில் பாதியை பகிர்ந்தளிக்கவும் அந்நிய மதத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கவும் இது என்ன காங்கிரசின் அப்பன் வீட்டு சொத்தா?


M Ramachandran
ஏப் 25, 2024 19:48

ப சி யோசித்து யோசித்து நடுத்தர மக்கள் ஏழைகள் மீது வரிபோட் தற்கு விளக்கமும் தந்தார் அவர்கள் தீர்க்க முடியாது திராணிஅற்றவர்கள் என்று வரி போட்டு திணித்தார்


Ramesh Sargam
ஏப் 25, 2024 12:24

பிறப்பதற்கு முன் வரி பிறந்து வாழ்நாள் முடியும்வரை மீண்டும் வரி பிறகு இறந்தபின்பும் வரி அன்று ஆங்கிலேயர் வரி விதித்தபோது, கட்டபொம்மன் - "வரி, வட்டி, கிஸ்தி யாரை கேட்கிறாய் வரி எதற்கு கேட்கிறாய் வரி வானம் பொழிகிறது பூமி விளைகிறது உனக்கேன் கட்ட வேண்டும் வரி எங்களோடு வயலுக்கு வந்தாயா? நாற்று நட்டாயா? ஏற்றம் இறைத்தாயா? அல்லது, கொஞ்சி விளையாடும் எங்குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்து கொடுத்தாயா? மாமனா? மச்சானா? மானங்கெட்டவனே " என்று ஆங்கிலேயர்களை எதிர்த்து பேசினான் இன்று நாம் தேர்ந்தெடுத்த அரசு நம்மை வரி விதித்து கொள்ளும்போது யாரும் எதுவும் எதிர்த்து கேள்வி கேட்பதில்லை தைரியமில்லாத மக்களாக நாம் இன்று உள்ளோம் சூடு, சொரணை அற்றவர்களாக உள்ளோம் வெட்கம் வேதனை


அப்புசாமி
ஏப் 24, 2024 19:13

நீங்கதான் வரிபோட்டே சாகடிக்குறீங்களே...


M Ramachandran
ஏப் 25, 2024 19:41

அப்பு ப சி யாய் சௌகர்யமாக மறக்காதீங்க


ஆரூர் ரங்
ஏப் 24, 2024 18:31

எழுபதுகளில் மதுரையில் நடந்த திமுக மாநில மாநாட்டில் தனிநபர் சொத்துக்கு அதிகபட்சமாக ஐந்து லட்சம் என உச்சவரம்பு விதிக்க வேண்டும்.யாரிடமாவது கூடுதல் சொத்து இருந்தால் அரசுடைமை ஆக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்போ காங்கிரசும் அதனை ஏற்று தாம் ஆளும் மாநிலங்களில் அமல் படுத்த வேண்டும்.


Rajarajan
ஏப் 24, 2024 16:55

தனியார் ஊழியர்கள், ஏழை பாழைகளை விட்டுத்தள்ளுங்கள் அவர்களைப்பற்றி எந்த அரசுக்கும் அக்கறை இல்லை என்பதே உண்மை கட்சிகளின் இலக்கு எல்லாம், அரசு ஊழியரை பற்றி தான் அவர்கள் பனி ஓய்வு அடைந்தபின்னும், அவர்களுக்கு பஞ்சபடி தந்து, அவர்களது வோட்டு வங்கியை தங்க வைப்பது தான் உண்மையில், அணைத்து மக்களும் சமம் பொதுத்துறை நிறுவனங்களை இழுத்து மூடி மற்றும் பஞ்சபடியை முற்றிலும் ஒழிந்தால், இவர்கள் அக்கறையை மெச்சலாம் தனியாரிடம் பிடுங்கி, அரசு ஊழியருக்கு வாரி கொடுப்பார்கள்


சோழநாடன்
ஏப் 24, 2024 16:08

எல்லா பொருள்களுக்கும் ஜிஎஸ்டி என்ற பெயரில் வரி மேல் வரி போட்டு மக்களை வதைக்கும் பாஜக, மூத்தக்குடிமக்கள் % கட்டண சலுகையில் இரயில் பயணம் செய்தார்கள் அதையும் ரத்து செய்தீர்கள் இந்தியாவுக்கு என்று சொந்த பயணிகள் விமானம் இல்லை நேரு, இந்திரா காந்தி உருவாக்கிய பொதுத்துறை என்னும்ம


Pandi Muni
ஏப் 26, 2024 09:00

மத்திய அரசு வசூலிக்கும் வரியில் பாதிக்கு மேல் மாநிலங்கள் வாக்கட்டை போட்டு கொள்கிறது என்பது எத்தனை அறிவாளிகளுக்கு தெரியும்


karthik
ஏப் 24, 2024 15:56

அப்படி தான் தெரியும் இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை