உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கலவரம் நடக்கும்: அமித்ஷா எச்சரிக்கை

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கலவரம் நடக்கும்: அமித்ஷா எச்சரிக்கை

கதிஹர்: காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் பயங்கரவாத விவகாரங்களில் மென்மையான போக்கை கடைபிடிப்பதாகவும், அக்கட்சி ஆட்சிக்கு வந்தால் நாட்டில் வறுமை, கலவரம் மற்றும் அட்டூழியங்கள் அதிகரிக்கும் என்றும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.பீஹாரின் கதிஹரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: பிரதமர் மோடி, நாட்டில் நக்சலைட்களை ஒழித்து, பயங்கரவாதத்தை ஒடுக்கி உள்ளார். காங்கிரஸ் ஆட்சியின் போது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதற்கு யாரும் பதிலடி கொடுக்கவில்லை. இதற்கு மாறாக, பாலக்கோட் மற்றும் உரியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களுக்கு சர்ஜிக்கல் தாக்குதல் மற்றும் பாலக்கோட்டில் விமானப்படை தாக்குதல் என இந்தியா பதிலடி கொடுத்தது. நமது பாதுகாப்பு படையினர் எல்லை தாண்டிச் சென்று பயங்கரவாதிகளை அவர்களது மறைவிடத்திலேயே அழித்தனர்.காங்கிரஸ் ஆர்ஜேடி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வறுமை, அட்டூழியம், வறுமை மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்படும். தே.ஜ., கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்கும் போது இரட்டை இன்ஜீனின் அரசினால் கிடைக்கும் பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். ‛ இண்டியா ' கூட்டணி பீஹாரை கற்காலத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

N.Arumugam
ஏப் 22, 2024 11:11

உண்மையை இப்படி சொல்லிட்டாரே இது ஒரு வகை மிரட்டலோ


Mani . V
ஏப் 22, 2024 06:14

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கலவரம் நடக்கும் கலவரத்தை பாஜக முன்னெடுத்து நடத்தும்


Venkatesan.v
ஏப் 21, 2024 23:20

? உண்மை நீங்கள் கலவரம் செய்ய போிறீர்கள்


ديفيد رافائيل
ஏப் 21, 2024 22:52

Open ஆகவே மிரட்டுறானுக தோற்றுப்போனா என்ன பண்ணுவோம்னு நான் கூட தப்பா நினைச்சுட்டேன் மோடியின் திறமையால் தான் இரண்டாவது முறை ஆட்சி அமைச்சானுகன்னு தப்பா நினைச்சுட்டேன் மோடி குஜராத்ல five times CM ஆக இருந்தது இப்படி தான் மிரட்டி இருப்பானுக போல


Lion Drsekar
ஏப் 21, 2024 21:52

பழைய நோட்டுக்கள் மீண்டும் புழக்கத்தில் வரும் , தீய சக்திகளஅனைவரும் விடுதலை வந்தே மாதரம்


Pundai mavan
ஏப் 21, 2024 21:50

ஆமாம் பீஜேபீ ஆட்சியில் இல்லாத காலங்களில் மட்டுமே குண்டு வெடிப்பு மதக் கலவரத்தை நடத்துவார்கள் பிறகு அதன் குற்றவாளி தீவிரவாதிகட்கு தேர்தலில் சீட் கொடுப்பானுக ரஸ் தீவிரவாதிகள்


K.Muthuraj
ஏப் 21, 2024 20:56

உண்மைதான் எல்லாம் அடி வாங்கிட்டு கம்முனு போயிட்டா ஏது கலவரம் உங்களுக்கு கோவை குண்டுவெடிப்பு தெரியாது மும்பை குண்டுவெடிப்பு, கலவரம் தெரியாது


maharaja
ஏப் 21, 2024 20:09

மலரின் கருத்து பகுதியில் மாற்றம் தெரிகிறது இந்த முறை ஆட்சி மாற்றம் நிச்சயம் இருக்கும் ஏ


K.n. Dhasarathan
ஏப் 21, 2024 19:50

அமித் ஷா ஐயா அவர்களே மாற்றி சொல்றீங்க உங்கள் ஆட்சி மீண்டும் வந்தால் வரலாறு காணாத கலவரம் வெடிக்கும், பொய்ஜே பி அல்லாத மாநிலங்களில் ஆட்சிகள் கவிழ்க்கப்படும், முதலமைச்சர்கள் சிறைகளில் தள்ளப்படுவார்கள் அவர்கள் மீது அனைத்து விதமான வழக்குகள் போடப்படும், அடுத்து ஆட்சியில் மீதமுள்ள பொது நிறுவனங்கள் விற்கப்படும் மக்கள் ஆங்கிலேய ஆட்சிக்காலம் போல அடிமைகள் ஆவார்கள்


முருகன்
ஏப் 21, 2024 18:15

சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் ஆட்சி செய்த போது எத்தனை கலவரங்கள் நடந்தது நாட்டில் இப்படி சொல்லி மக்களிடம் ஓட்டு வாங்க நினைப்பது தவறு


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை