உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை இடிப்பார்கள்: மோடி பேச்சு

காங்., ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை இடிப்பார்கள்: மோடி பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''சமாஜ்வாதி மற்றும் காங்., ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்; குழந்தை ராமர் கோயிலில் இருந்து மீண்டும் கூடாரத்திற்கே செல்வார்'' என பிரதமர் மோடி பேசியுள்ளார்.உத்தர பிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: ரேபரேலி மக்கள் பிரதமரைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார், இதைக் கேட்ட சமாஜ்வாதி கட்சியின் இளவரசரின் (அகிலேஷ் யாதவ்) இதயம் உடைந்தது, கண்ணீர் மட்டும் வெளியே வரவில்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9hcw31x0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவரது மனதில் உள்ள ஆசைகள் அனைத்தும் கரைந்தன. சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்; குழந்தை ராமர் கோயிலில் இருந்து மீண்டும் கூடாரத்திற்கே செல்வார். புல்டோசர்களை எங்கு ஓட்ட வேண்டும், எங்கு ஓட்டக்கூடாது என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் அவர்கள் டியூசன் பயில வேண்டும். 'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' திட்டத்தின் மூலம் இப்போது நான் வெளிநாடுகளுக்குச் சென்று பரிசுகளைத் தேர்ந்தெடுக்கும்போது எனது மூளையை அதிகம் பயன்படுத்த வேண்டியதில்லை; உ.பி., மாநில இணையதளத்தைப் பார்த்து பரிசுகளுக்காக 5, 6 பொருட்களை எடுத்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Sivakumar
மே 17, 2024 20:08

வழிபாட்டுத்தலங்களை இடிப்பது அவிங்க design இல்ல பாஸ் அது உங்க design


theruvasagan
மே 18, 2024 08:25

வழிபாட்டுத் தலங்களை இடிக்கவில்லை. அன்னிய ஆக்ரமிப்பாளர்களால் வன்முறை மூலம் அநியாயமாக தங்களிடமிருந்து பறிக்கப்பட்ட தங்களது வழிபாட்டுத் தலங்களை மீட்டெடுக்க நடந்த தார்மீகப் போராட்டங்கள்.


Ravichandran S
மே 18, 2024 15:29

வரலாறு பார்த்து படியுங்கள் இந்தியாவின் சொத்துகளை கொள்ளை அடித்தது வழிபாட்டு தலங்களை இடித்தது யார் என தெரியும்


Narayanan Muthu
மே 17, 2024 20:07

இவருக்கு பதவி ஆசை இல்லை பதவி வெறி தலைக்கு ஏறி மூளை மழுங்க செய்து விட்டது இவரின் சமீப கால பிதற்றல்கள் இதற்க்கு சரியான உதாரணம் இப்படிப்பட்ட ஒருவர் இந்தியாவின் பிரதமராக கடந்த பத்தாண்டுகளாக இருந்தது இந்திய மக்களின் துரதிருஷ்டம் இனியும் இவரை பிரதமராக தேர்நதெடுக்க வைப்பார்கள் என இவர் போடும் நாடகங்களும் வெறுப்பு பேச்சுகளும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது இவரின் கனவு நிச்சயமாக நிறைவேறாது


Kasimani Baskaran
மே 17, 2024 15:57

சாத்தியம் இல்லாமல் இல்லை - ஏனென்றால் கோவில் கோவிலாக வலம் வரும் வின்சி அண்டு கோ இராமர் கோவிலை விசிட் கூட செய்யவில்லை நூற்றுக்கணக்கில் வக்கீல்களை அனுப்பி கோவில் கட்டவிடாலம் தடுக்க அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸ் செய்யத்தான் செய்தது வெட்கமில்லாத சில இந்துக்கள் அதை கண்டுகொள்ளவில்லை


ஆரூர் ரங்
மே 17, 2024 15:52

சனாதன நம்பிக்கையை ஒழிப்பேன் என்று கூறும் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் காங்கிரஸ் இடித்துவிட வாய்ப்புள்ளது. ராமர் எந்தக்கல்லூரியில் இன்ஜினீயரிங் படித்தார் என்று கேவலமாகப் பேசிய கட்சிதான் அது. அயோத்தி வழக்கில் ராமர் ஒரு கற்பனை பாத்திரம் என்று கோர்ட்டுக்கு கூறிய கட்சி எது? ஹிந்து நம்பிக்கைகளுக்கு எதிராக வாதாட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட வக்கீல்களை அனுப்பியது வேறு எந்தக் கட்சி? ஆக பிரதமர் உண்மையையே பேசியுள்ளார் எனத் தோன்றுகிறது.


ஆரூர் ரங்
மே 17, 2024 15:45

மூன்றாண்டுகளில் விடியல் ஆட்சி இடித்த ஹிந்து ஆலயங்களின் எண்ணிக்கை மோதிஜி க்கு தெரிவிக்கப்படவில்லை என நினைக்கிறேன்.


karupanasamy
மே 17, 2024 15:23

திமுகவின் குறைந்தபட்ச செயல் திட்டத்தின் முதல் திட்டமாக சனாதன அழிப்பு நடவடிக்கையாக அயோத்தி உட்பட அனைத்து ராமர் ஆலயங்களையும் இடிக்க வேண்டும் என்கிற நிபந்தையை ஏற்றால்தான் ஆதரவு கடிதம் கொடுப்போம் என்று கூறுவர்கள்


Kanagaraj M
மே 17, 2024 14:36

அந்த மாதிரி வேலைகளை காங்கிரஸ் செய்ய வாய்ப்பில்லை அவர்களுக்கும் ஓட்டு வங்கி வேண்டுமே


Kogul
மே 17, 2024 14:30

மரியாதைக்குரிய பிரதமர் மன்னிக்கவும். இந்த பேச்சு அர்த்தமற்றது


முருகன்
மே 17, 2024 14:11

உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவர் தினமும் மக்களை பதட்ட படுத்தும் மாதிரி பேசுவது சாரியா?


Lion Drsekar
மே 17, 2024 14:04

முன் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடமா ? குடிநீர் ஆதாரத்தில் கட்டப்பட்ட கட்டிடமா ? மழை நீர்க்கால்வாய் இடையூறாக கட்டப்பட்ட கட்டிடமா ? இவர்களைத்தான் எங்கள் நாட்டில் காரணம் கட்டி இடித்துக்கொண்டு வருகிறார்கள் அப்படி இருக்க உச்ச நீதிமன்றம் ஆணையின் படி கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தை இடிக்க ஆரம்பித்தால் சட்டம் என்று ஒன்று எதற்க்காக இருக்கிறது ? தேர்தல் என்று வந்தாலே எல்லோருமே இப்படித்தானா ? வந்தே மாதரம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை