உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசத்தின் வளர்ச்சி பற்றி இண்டியா கூட்டணிக்கு கவலையில்லை: நட்டா தாக்கு

தேசத்தின் வளர்ச்சி பற்றி இண்டியா கூட்டணிக்கு கவலையில்லை: நட்டா தாக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திஸ்பூர்: ''தேசத்தின் வளர்ச்சி பற்றியோ, மக்கள் நலன் பற்றியோ இண்டியா கூட்டணியினர் சிறிதும் கவலைப்படுவதில்லை'' என பா.ஜ., தேசிய தலைவர் நட்டா பேசினார். அசாம் மாநிலத்தில் கோகராஜார் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் நட்டா பேசியதாவது: 10 ஆண்டுகளில் 70 முறை வட கிழக்கு மாநிலங்களுக்கு பிரதமர் மோடி வந்துள்ளார். இதுவரை எந்த பிரதமரும், மோடி வந்தது போல் 70 முறை வந்தது இல்லை. வடகிழக்கு மாநிலங்களுக்கு 680க்கும் மேற்பட்ட முறை மத்திய அமைச்சர்கள் வந்துள்ளனர். வடகிழக்கில் கிட்டத்தட்ட 70 சதவீத பகுதிகளில் இப்போது சிறப்பு ஆயுதப்படை சட்டம் திரும்ப பெறப்பட்டுள்ளது. இதனை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். காங்கிரசின் கொள்கை என்ன?. மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் பணியை தே.ஜ., கூட்டணி அரசு செய்து வருகிறது. இதனை பிரதமர் மோடி மற்றும் ஹிமந்த பிஸ்வா சர்மா அரசு செய்துள்ளது. இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இண்டியா கூட்டணி

இண்டியா கூட்டணியின் தலைவர்கள் சிறையில் அல்லது ஜாமினில் உள்ளனர். தேசத்தின் வளர்ச்சி பற்றியோ, மக்கள் நலன் பற்றியோ இண்டியா கூட்டணியினர் சிறிதும் கவலைப்படுவதில்லை. மக்களை ஏமாற்றி ஓட்டுக்களை வழங்குவதே அவர்களின் நோக்கம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Priyan Vadanad
ஏப் 18, 2024 15:07

காசர்கோடு விவகாரம் உண்மையானால் நட்டாவின் எதிர்பார்ப்பு நடக்கும் அதற்கு ஏற்கெனெவே அச்சாரம் போட்டாகிவிட்டது


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை