உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நான் யாருடனும் பேசவில்லை : சரத்பவார் மறுப்பு

நான் யாருடனும் பேசவில்லை : சரத்பவார் மறுப்பு

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் ஆந்திர முதல்வராக பதவி ஏற்க உள்ள சந்திரபாபு நாயுடு உடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இதனை மறுத்த சரத்பவார், யாருடனும் பேசவில்லை எனக்கூறியுள்ளார். லோக்சபா தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290 தொகுதிகளுக்கு மேல் முன்னணியில் இருக்கிறது. இதில் பா.ஜ., மட்டும் 241 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. கடந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பா.ஜ., இந்த முறை கூட்டணி தயவில் மட்டுமே ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=on35lcko&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பீஹாரில் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 14 இடங்களில் வென்றுள்ளார், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.நிதீஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு உடன், சரத்பவார் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இதனை சரத்பவார் மறுத்துள்ளார். நான் யாருடனும் பேசவில்லை எனக்கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Sbnagarajan 42kkst South St Aruppukottai
ஜூன் 05, 2024 09:03

யாருக்கும் பெரும்பான்மை இல்லை நடந்த தேர்தலை ரத்து செய்து விட்டு புதிய தேர்தல் விரைவில் நடத்தப்படும்


Sbnagarajan 42kkst South St Aruppukottai
ஜூன் 05, 2024 08:55

இந்தியாவின் நிலையான பொருளாதார வளர்ச்சி இனிமேல் எட்டாதகனியே இனிமேல் காங்கிரஸ் ஆட்சி அமைத்தாலும் ஆறு மாதங்கள் மட்டுமே நிலைக்கும் ஆறு மாதங்களுக்கு ஒரு ஆட்சி என இருந்திடும்


Bye Pass
ஜூன் 05, 2024 08:23

ரொம்ப ரசித்து எழுதியிருக்கார்


Barakat Ali
ஜூன் 05, 2024 07:20

பேசியிருப்பார்... பாஜகவாக இருந்தாலும் இப்படித்தான் செய்திருக்கும்...


S.Govindarajan.
ஜூன் 04, 2024 18:53

யோக்கியன் வருகிறான்.செம்பைக்கவிழ்த்து வை


Vathsan
ஜூன் 04, 2024 15:26

BJ பார்ட்டியின் அதே technique. காங்கிரஸும் செய்வது வியப்பில்லை.


Selvakumar Krishna
ஜூன் 04, 2024 15:11

இந்த குதிரை பேரமெல்லாம் பீசப்பிகளுக்குதான் கை வந்த கலை,


Bye Pass
ஜூன் 05, 2024 08:25

அனுபவித்து எழுதினாரா ?


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ